Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆமாம் நான் செய்தேன், அதை சொல்ல வெட்கப்படவில்லை : ஸ்ருதிஹாசன்

28 பிப், 2020 - 18:54 IST
எழுத்தின் அளவு:
Shruti-Haasan-clarify-about-Plastic-surgery

நடிகர் கமல்ஹாசனின் மூத்த வாரிசு நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், திடீரென சினிமாவிற்கு பிரேக் விட்டார். காதல் தோல்வி போன்றவற்றிலிருந்து மீண்டு, இப்போது மீண்டும் படங்களில் நடிக்கிறார். தமிழில் விஜய் சேதுபதி உடன் லாபம் படத்திலும், தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடிக்கிறார். இந்நிலையில் தான் முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததை சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதுப்பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஸ்ருதிஹாசன், எனது முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதை பதிவிடுகிறேன். அதற்கான காரணத்தை நான் உங்களுக்கு சொல்கிறேன். என்னை பற்றி பிறர் கூறும் கருத்திற்கு நான் செவி சாய்ப்பதில்லை. இவர் குண்டாகிவிட்டார், அவர் ஒல்லியாகிவிட்டார் என்பது போன்று வரும் கருத்துக்கள் ஏற்க கூடியதாக இல்லை. இந்த படங்கள் 3 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.

நீண்டகாலமாகவே மனதளவிலும், உடல் அளவிலும் ஹார்மோன்களுடன் நல்ல உறவினை மேற்கொள்ள முயற்சிக்கிறேன். அது சுலபமானதல்ல. என்னுடைய வலிகள் எளிதானதல்ல, என்னுடைய உடல் மாற்றங்கள் எளிதானதல்ல. ஆனால், என்னுடைய பயணத்தை பகிர்வது எனக்கு எளிதாக இருக்கிறது. பிரபலமாக இருந்தாலும் சரி... பிரபலமாக இல்லையென்றாலும் சரி...




இதுதான் என் வாழ்க்கை. இதுதான் என் முகம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன். ஆமாம் நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். இதை சொல்ல வெட்கப்படவில்லை. அதனை நான் விளம்பரப்படுத்தினேனா? இல்லை அதற்கு எதிராக கருத்து தெரிவித்தேனா? நான் எனக்கான பயணத்தை தேர்வு செய்துள்ளேன்.

நமக்கும், மற்றவர்களுக்கும் நாம் செய்யக்கூடிய உதவி, நம் உடல்கள் மற்றும் மனதின் மாற்றங்களையும், இயக்கத்தையும் ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். அன்பை பரப்பி குளிர்ச்சியாக இருங்கள். என்னை இன்னும் கொஞ்சம் அதிகமாக நேசிக்க நான் தினமும் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் என் வாழ்வில் மிகப்பெரிய காதல் கதை உள்ளது. உங்களிடமும் தான் என நம்புகிறேன்.

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
இளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: கோர்ட் உத்தரவுஇளையராஜா - பிரசாத் ஸ்டுடியோ வழக்கு: ... 'டப்பிங்' விவகாரத்தில் நடந்தது என்ன? 'டப்பிங்' விவகாரத்தில் நடந்தது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

மணி - புதுகை,இந்தியா
02 மார், 2020 - 10:49 Report Abuse
மணி இதுவெல்லாம் நாட்டுக்கு தேவையான செய்தியா? கருமம் கருமம்...
Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
01 மார், 2020 - 08:50 Report Abuse
 N.Purushothaman Body Teasing என்கிற ஒருவரின் அங்க அடையாளங்களை வைத்து விமர்சிப்பது அவரின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடுவது தப்பு ....
Rate this:
Krish - Chennai ,இந்தியா
01 மார், 2020 - 07:02 Report Abuse
Krish பாவம் அந்த இரண்டு பெண்களும். தோல்வியே நிறைய. ரஜினியின் பெண்களில் இருவரும் சுதாரித்து வந்து விட்டார்கள். கூட அம்மா இருந்திருந்தால் பெண்களுக்கு கூடுதல் பலம்.
Rate this:
Vena Suna - Coimbatore,இந்தியா
01 மார், 2020 - 00:47 Report Abuse
Vena Suna ஆமாம் நான் செய்தேன்னு பார்த்தோனே என்னவோ சுவாரசியமா இருக்கும்னு பாத்தேன்.. சப்புன்னு ஆயிடுச்சி
Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
29 பிப், 2020 - 23:08 Report Abuse
கதிரழகன், SSLC பாவம் இந்த பொண்ணு. அப்பன் காமுகன், இவளை அவன்கிட்டேந்து காப்பாத்தணும்னுதான் இவ அம்மா அவன் வீட்ட விட்டே வெளியேறினாக. "என் வலி எளிதானதல்ல" என்ன செஞ்சானோ அந்த படுபாவி .
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in