Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெஹ்ரீன் மீது அடுக்கடுக்காய் குற்றம் சாட்டும் தயாரிப்பாளர்

27 பிப், 2020 - 11:40 IST
எழுத்தின் அளவு:
Producer-reply-to-actress-Mehreen

கடந்த இரண்டு நாட்களாக நடிகை மெஹ்ரீன் குறித்த சர்ச்சை செய்திகள் தான் பரபரப்பாக மீடியாக்களில் இடம்பிடித்து வருகின்றன. தமிழில் நெஞ்சிலே துணிவிருந்தால், தனுஷ் நடித்த பட்டாஸ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். தெலுங்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அஸ்வத்தாமா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்தப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் இவர் கலந்துகொள்ளவில்லை என்பதால் தயாரிப்பாளர் இவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையின் பில்லை கட்டாமல் நிறுத்தி வைத்தார் என்றும், ஆனால் அங்கிருந்து சொல்லாமல் கொள்ளாமல் மெஹரின் தப்பித்துச் சென்றார் என்றும் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து மெஹ்ரீன் கூறும்போது படத்தின் தயாரிப்பாளர் சங்கர் பிரசாத் பற்றி மறைமுகமாக விமர்சித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இதுவரை அமைதி காத்து வந்த அஸ்வத்தாமா படத்தின் தயாரிப்பாளரும் அந்த படத்தின் நாயகனாக நாக சவுர்யாவின் தந்தையுமான சங்கர் பிரசாத் தற்போது மவுனம் கலைத்து உள்ளார்.

மெஹ்ரீன் பற்றி அவர் கூறும்போது, “இந்தப்படத்தில் மெஹ்ரீனை ஒப்பந்தம் செய்யும்போதே எனது நண்பர்கள் பலரும் அவர் வேண்டாம் என கூறினார்கள்.. அதையும் மீறி அவரை ஒப்பந்தம் செய்தேன்.. 30 நாட்கள் அவரிடம் கால்சீட் பேசி ஒப்பந்தம் செய்தத்தில் அவர் நடித்தது என்னவோ 15 நாட்கள் தான்.. பொதுவாக ஒருவருக்கு சம்பளம் தரும்போது குறைந்தபட்சம் பத்து லட்சம் ரூபாயாவது பிடித்து வைத்துக் கொண்டு தான் கடைசியில் தான் தருவார்கள்.. ஆனால் இவர் சில புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத போதும் கூட, அவருக்கான முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டோம்..

படப்பிடிப்பில் கூட இவரது உணவுக்கான செலவும், லாண்டரி பில்களும் மற்றும் ஸ்பா உள்ளிட்ட அலங்கார செலவுகளும் என ஒரு மிகப்பெரிய தொகையை எங்கள் தலையில் கட்டினார். அதுமட்டுமல்ல அவரது உதவியாளருக்கு என தனி அறை வசதி மற்றும் சம்பள தொகையாகவே 6 லட்ச ரூபாய் கொடுத்து இருக்கிறோம். ஹோட்டல் அறையை விட்டு அவர் காலி செய்யும்போது எங்களிடம் முறையாக தகவல் சொல்லிவிட்டு செல்லவில்லை.. இருந்தாலும் ஹோட்டல் நிர்வாகத்துடன் நல்லுறவை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த கட்டணத்தையும் செலுத்தி விட்டோம்.

இதையெல்லாம் விட கொடுமை என்னவென்றால் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது நாயகன் நாகசவுர்யாவுக்கு படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விபத்து ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு சில நாட்கள் தாமதமானது.. ஆனால் ஹீரோவிடம் அவரது காயம் குறித்து ஒரு மரியாதைக்கு கூட விசாரிக்காத மெஹ்ரீன், அவருக்கு ஏற்பட்ட காயத்தால் படப்பிடிப்பு தாமதமாகிறதே என்று கோபப்படத் தான் செய்தார்..” என பல குற்றச்சாட்டுகளை வீசியுள்ளார் தயாரிப்பாளர் சங்கர் பிரசாத்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இறுதிக்கட்டத்தில் சினம்இறுதிக்கட்டத்தில் சினம் ஜானு படம் நிறைய கற்றுக் கொடுத்தது: சமந்தா ஜானு படம் நிறைய கற்றுக் கொடுத்தது: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in