Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

தயவுசெய்து இதுபோல முயற்சிக்காதீர்கள் : பிரித்விராஜ் வேண்டுகோள்

24 பிப், 2020 - 14:37 IST
எழுத்தின் அளவு:
Dont-try-this-Prithviraj-advice

நடிப்பில் மிக்க ஈடுபாடு கொண்ட சில நடிகர்கள் தங்களது கதாபாத்திரத்திற்காக தோற்றத்தை மாற்றுவதற்கும், உடல் எடையை கூட்டி குறைப்பதற்கும் தயங்கமாட்டார்கள். மலையாள நடிகர் பிரித்திவிராஜ் அந்த வகையைச் சேர்ந்தவர் தான். தற்போது அவர் பிரபல மலையாள இயக்குனர் பிளஸ்சி டைரக்ஷனில் உருவாகி வரும் ஆடுஜீவிதம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவர் கால மாறுபாட்டுக்கு ஏற்ப இரண்டு மூன்று விதமான தோற்றங்களில் நடிக்கிறார். அதில் ஒன்றுதான் துபாயில் நல்ல வேலை என நம்பிச் சென்று ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் இளைஞனின் கதாபாத்திரம்.

இந்த கெட்டப்பிற்காக கிட்டத்தட்ட இவர் தனது உடல் எடையில் 30 கிலோ எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக இவர் முறைப்படி பயிற்சியாளர்களின் ஆலோசனையுடன் உணவுக் கட்டுப்பாட்டுடன் இந்த எடை குறைப்பில் இறங்கினாலும், இதனால் பசி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவற்றையும் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதனால் உடல் எடையை குறைத்து படங்களில் நடிக்க விரும்பும் யாரும் தயவுசெய்து இதுபோன்ற முயற்சியில் இறங்க வேண்டாம் என ஒரு வேண்டுகோளையும் விடுத்துள்ளார் பிரித்விராஜ்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சீரியல் கொலை பின்னணியில் பிப்-28ல் வெளியாகும் பாரன்சிக்சீரியல் கொலை பின்னணியில் பிப்-28ல் ... மொட்டை தலையுடன் வலம் வரும் திலீப் மொட்டை தலையுடன் வலம் வரும் திலீப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

meenakshisundaram - bangalore,இந்தியா
25 பிப், 2020 - 04:23 Report Abuse
meenakshisundaram அதே போலத்தான் இந்த தாடியும் ,அதையும் வைத்து எல்லோரையும் பயமுறுத்தும் முயற்சியில் யாரும் ஈடு பட வேண்டாம்னும் சொல்லி இருக்கணும்?நல்ல முகத்துக்கு இது தேவையா ?மலையாளத்தில் முக வசீகரம் கொண்ட இவர் பிரேம் நசீருக்கு அடுத்தபடியா தோற்றத்தை கொண்டவர் .அவரே என்றும் தாடி வைத்ததில்லையே?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in