Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிறப்பு மேக்கப் இல்லாமல் ஜெ-வாக மாறிய கங்கனா

24 பிப், 2020 - 13:24 IST
எழுத்தின் அளவு:
Kangana-looking-as-Jayalalitha

விஜய் இயக்கத்தில், ஹிந்தி நடிகையான கங்கனா ரணவத், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'தலைவி'.

இப்படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வந்த போது பலரும் அதைக் கிண்டலடித்தனர். ரப்பர் போன்ற பொருளினால் முகமூடி போன்று உருவாக்கப்படும் 'புரோஸ்தடிக்' மேக்கப் மூலம் ஜெயலலிதாவின் தோற்றத்தை கங்கனாவுக்கு வழங்கியிருந்தார்கள். அது பொருத்தமாக இல்லை என்று பலரும் விமர்சித்தார்கள்.

பின்னர் இளமைக் கால ஜெயலலிதா போன்ற ஒரு தோற்றமும், பரதநாட்டிய தோற்றத்தில் மற்றொரு தோற்றமும் வெளியாகின. அவற்றிற்கு பெரிய அளவில் எதிர்மறையான விமர்சனங்கள் வரவில்லை.

இந்நிலையில் இன்று ஜெயலலிதான் பிறந்தநாளை முன்னிட்டு மேலும் ஒரு புதிய தோற்றத்தை வெளியிட்டுள்ளார்கள். அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம் ஒன்றின் தோற்றத்திற்கேற்றபடி கங்கனாவை மாற்றியுள்ளார்கள்.

அது குறித்து கங்கனாவின் அக்கா ரங்கோலி, ”தலைவி' படத்தில் கங்கனா. எந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் இல்லாமல், புரோஸ்தடிக் மேக்கப் இல்லாமல் ஜெயா அம்மா போன்ற தோற்றத்தில் கங்கனா. அதிர்ச்சியாக உள்ளது. உறுதியாக இருந்தால் எதுவும் முடியும்,” என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தன் படத்தை த்ரிஷா புறக்கணிப்பது சரியா ?தன் படத்தை த்ரிஷா புறக்கணிப்பது ... துப்பறிவாளன் 2 விலகல் செய்தி: மிஷ்கின் நக்கல் பதில் துப்பறிவாளன் 2 விலகல் செய்தி: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in