Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

சொன்னா புரியாது மச்சான்...! நடிகர் அசோக் செல்வன் கலகல பேட்டி

16 பிப், 2020 - 09:45 IST
எழுத்தின் அளவு:
actor-ashok-selvan-interview

தெகிடி படத்திற்கு பிறகு உங்களுக்கான சரியான, கம்பேக்னு சொல்றாங்க உண்மையா?


இப்படியொரு வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. திரைக்கதை மீது நம்பிக்கை இருந்தது. பல காதல் கதைகளை கடந்து வந்திருப்போம். இதில், கொஞ்சம் பேண்டஸி கலந்து டைரக்டர் கொடுத்திருப்பார்.இன்றைய மாடர்ன் காதல் கல்யாணத்தை பேசற படம் என்பதால் பலருக்கும் இது பிடித்திருக்கும். நான் ஆசைப்பட்டு நடிச்ச ரொமாண்டிக் காமெடி படம் இது.


எப்படி கிடைச்சது இந்த வாய்ப்பு?


இயக்குனர் அஷ்வத், ஒன்பது வருட நண்பன். நாளைய இயக்குனர் நிகழ்ச்சி குறும்படங்களில் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கிறோம். என்னை எப்படி திரையில் காண்பிக்கணும்னு அவனுக்கு நல்லா தெரியும்.ராட்சஷன் தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு நன்றி சொல்லணும். என்னையும் அஷ்வத்தையும் நம்பி படம் எடுக்க முன்வந்ததற்கு.


விஜய் சேதுபதியுடன்நடித்த அனுபவம்?


சூது கவ்வும் படத்தில் இருந்தே, அண்ணா எனக்கு பழக்கம். நான் நல்லா வரணும்னு நினைக்கிறவங்கள்ல அவரும் ஒருத்தர். கதை, கதாப்பாத்திரம் எதுவும் கேட்காமல், நடிக்கிறேன் என்ன செய்யணும் சொல் என்றார்.இந்த மனசு யாருக்கு வரும். தலையில் கிரீடம் வச்சுகிட்டு புராண கதைகள்ல வர மாதிரியான கடவுள் அவர் இல்லை. இயல்பா, யதார்த்தமா கதையோடு ஒன்றி வருவார். நிஜத்தில் இந்த மாதிரியான கடவுள் பலருக்கும் கிடைச்சிருக்கும்.


பட புரொமோஷனுக்கு புதிய டிரிக்ஸ் பயன்படுத்தியிருக்கீங்க போல?


சினிமா ஸ்டார்களுக்கு இணையாக, இன்று அதிகம் கவனிக்கப்படுவது டிக்டாக் பிரபலங்கள்தான்.தீபிகா படுகோனே போன்ற பாலிவுட் பிரபலங்கள் கூட சகஜமாக டிக்டாக் செய்து தங்கள் படங்களை புரொமோஷன் செய்கின்றனர். தமிழில் நாங்கள் முதல் முறையாக பயன்படுத்தினோம். தமிழில் மிக பிரபலமான டிக்டாக்கர்களை வரவழைத்து, படத்தின் பாடல்களுக்கு ஏற்ற வித்தியாசமான வீடியோக்களை இணையத்தில் போட்டோம்.


படத்தின் ஒன்லைன் ஸ்டோரி?


சிறு வயதில் இருந்து நண்பர்களாக பழகி வரும் இருவரில் திடீரென ஒருவர் நாம் கல்யாணம் பண்ணிக்கலாமா என கேட்க, அங்கே துவங்கும் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் தான், ஓ மை கடவுளே.இதற்கு மேல் கேட்காதீங்க, சொன்னா புரியாது மச்சான்... தியேட்டருக்கு வந்து பாருங்க...! என, படத்தின் பேமஸ் டயலாக்கோடு அழைப்பை துண்டித்தார்...!


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுங்கள் - காஜல் அகர்வால்முடிந்தவரை மற்றவர்களுக்கு ... ஸ்மார்ட் வில்லன் பிரசன்னா ஸ்மார்ட் வில்லன் பிரசன்னா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in