Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகிழ்ச்சிக்காக பெரிய வலியைத் தாங்கலாம்: சூர்யா

14 பிப், 2020 - 15:11 IST
எழுத்தின் அளவு:
Suriya-happiness

நடிகர் சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் சூரரைப் போற்று. சுதா கெங்கரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் கதை, பட்ஜெட் விமானப் பயணத்தை இந்தியாவில்அறிமுகம் செய்த ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை. சூரரைப் போற்று படத்தின் பாடல் வெய்யோன் சில்லியை விமானத்தில் பறந்தபடியே வெளியிட வேண்டும் என முடிவெடுத்தார் நடிகர் சூர்யா.

அப்படி பாடலை வெளியிடும்போது, முதல் விமானப் பயணத்தை மேற்கொள்ளும் ஏழை மாணவ - மாணவியர் தன்னோடு இருக்க வேண்டும் என விரும்பினார். இதற்காக, ஜவ்வாது மலை, ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவியரிடம் தங்களது கனவுகள் குறித்த கட்டுரைகளை எழுதி அனுப்பும்படி ஒரு போட்டியை வைத்திருந்தார். சிறப்பாக கட்டுரை எழுதி இருந்த நூறு பேரை தேர்வு செய்து, பாடல் வெளியீட்டின் போது தன்னோடு இருக்கச் செய்தார் சூர்யா.

இந்தப் பாடல் வெளியீட்டை முடித்து விட்டு வந்த சூர்யா, நெகிழ்ச்சியான அந்த நிகழ்வு குறித்து கூறியதாவது:

2000ல், மொத்த இந்திய மக்கள் தொகையில் ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே விமானத்தில் பயணம் செய்யும் அளவுக்கு வசதி படைத்தவர்களாக இருந்தனர். அனைத்து மக்களும் விரைவான பயணத்தை மேற்கொள்ளும் விதமாக, விமான சேவைத் துறையை மாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் கோபிநாத். அதற்காகவே, டெக்கான் ஏவியேஷன் நிறுவனத்தை துவங்கினார். அவர் பற்றிய கதையை படமாக்கலாம் என்றதும், அதில் நடிக்க ஒப்புக் கொண்டேன். அவருடைய தாக்கம் எனக்குள்ளே இருந்து கொண்டே இருக்கிறது.

அதனால், அவரைப் பற்றிய படத்தின் நிகழ்ச்சியில் குறைந்தபட்சம் நூறு பேராவது முதன்முறையாக விமானப் பயணம் செய்ய வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் கட்டுரை போட்டி நடத்தி, நூறு பேரை தேர்வு செய்தோம். அவர்களையெல்லாம் விமானத்தில் அழைத்துச் செல்லப் போகிறோம் என்று கூறியபோது, எங்களைவிட என் அம்மாவை, அக்காவை, அப்பாவை அழைத்துச் செல்லுங்கள் என்று, அந்த மாணவ-மாணவியர் கூறினர்.

நேற்று விமானத்தில் பயணித்தபோது அவர்களுக்கு ஏற்பட்ட உணர்வு, அதைக் கொண்டாடிய விதம் இவற்றைப் பார்க்கும்போது, அன்று கோபிநாத் அவர்களுடைய வெற்றி எந்த மாதிரியான மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும் என்று உணர்ந்தேன். சூரரைப் போற்று படத்தில், அவர் எதிர்கொண்ட வலிகளையெல்லாம் உணர்ந்தேன். இப்போது, அவர் வழியில் நாமும் ஏதோ செய்து விட்டதாக நினைத்து மகிழ்கிறேன். இந்த மகிழ்ச்சிக்காக, எவ்வளவு பெரிய வலிகளையும் தாங்கலாம்.


இந்த படத்திற்காக சுதா பத்து வருடங்களாக தனது கடின உழைப்பை கொடுத்துள்ளார். என்னோட 20 வருட திரைப்பயணத்தில் இது ஒரு சிறந்த படம் என்றுதான் சொல்வேன். அதேமாதிரி இந்த மிகப்பெரிய தேரை தனியாக இழுக்க முடியாது. அதற்கு பலம் வாய்ந்த நபர்கள் வேண்டும். அந்த வகையில், இந்த படத்தில் என்னோடு சேர்ந்து மோகன்பாபு சாரும் இந்த தேரை இழுத்துள்ளார்.



இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரைசா காதலன் யார்? - காத்திருக்கும் பிரபலங்கள்ரைசா காதலன் யார்? - காத்திருக்கும் ... 6 மணிக்கு மேல் நடிப்பதில்லை: சமந்தா 6 மணிக்கு மேல் நடிப்பதில்லை: சமந்தா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in