Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வானில் பறந்தபடி வெளியிடப்பட்ட சூரரைப் போற்று பாடல்

13 பிப், 2020 - 15:41 IST
எழுத்தின் அளவு:
SooraraiPottru-song-released-in-flight

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட்மற்றும் குணீத் மோங்காவின் சிக்யா எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் சூரரைப் போற்று திரைப்படத்தில் சூர்யா நாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்குகிறார். நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். பாலிவுட் நடிகர் ஜாகி ஷெராப் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஊர்வசி, மோகன் பாபு, பரேஷ் ராவல், கருணாஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இப்படம் ஏர்டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைக் கூறும் படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் பெரும்பகுதி விமானத்தில் நடப்பதால், இதில் இடம்பெறும் பாடல்களில் ஒன்றான வெய்யோன் சில்லி என்ற பாடலை விமானத்தில் வெளியிட முடிவு செய்தனர்.




உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படமென்பதால், பாடலை வெளியிடும் இந்த புதுமையான முயற்சியில் குழந்தைகள் கலந்து கொள்ள வேண்டுமென்று சூர்யா விரும்பினார். ஆகையால், அவரது அகரம் அறக்கட்டளையில் பயிலும் குழந்தைகளில் முதன்முறையாக விமானத்தில் பயணம் செய்யும் 70 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி, இன்று 13.02.2020 (வியாழக்கிழமை) மதியம் 01.30 மணிக்கு ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பாடல் வெளியிடப்பட்டது. ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் தலைவர் அஜய் சிங் மற்றும் சூர்யா இருவரும் வெளியிட்டனர். அவருடன் குழந்தைகளும், திரை நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.




ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிப்பதிவை நிகேத் பொம்மிரெட்டியும், படத்தொகுப்பை சதிஷ் சூர்யாவும் கவனிக்கிறார்கள். ஏப்ரல் மாதம் 2020 அன்று வெளியாகும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி வாங்கி வெளியிடுகிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியை எம்ஜிஆர்., அடித்தாரா? : மெய்க்காப்பாளர் மறுப்புரஜினியை எம்ஜிஆர்., அடித்தாரா? : ... 'ஒரு குட்டி கதை' - என்ன பாடப் போகிறார் விஜய் ? 'ஒரு குட்டி கதை' - என்ன பாடப் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

a natanasabapathy - vadalur,இந்தியா
14 பிப், 2020 - 08:52 Report Abuse
a natanasabapathy Ithai yellaam oru seythi yenru podukireere ilaignarkalai keduppathil ndaankaavathu thoon munnilai vakikkirathu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in