Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - ஈ.வெ.ரா விவகாரம்: அமைச்சர்கள் கருத்து: கஸ்தூரி கிண்டல்

24 ஜன, 2020 - 13:37 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-about-Ministers-statement-regarding-Rajini-issue

துக்ளக் விழாவில் ஈ.வெ.ரா. குறித்து ரஜினி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திகவினர் கடுமையாக எதிர்க்கும் நிலையில், அதிமுகவின் அமைச்சர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதுப்பற்றி நடிகை கஸ்தூரி தனது முகநூலில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில், ஒரே நாளில் ஒரே கட்சிக்காரங்க ஆளுக்கொரு விதமாக கருத்து பேசினால் பாவம் மக்கள் எதைன்னு எடுத்துக்கிறது. எங்கினாச்சும் சொகுசு ரிஸார்ட்டுக்குப் போயி கூடி ஒரு முடிவு எடுத்து வரலாமில்ல? அவங்க சொந்த மீடியாவே குழம்புறாங்க.

இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், ஈ.வெ.ரா.வை விமர்சித்த ரஜினியை திமுககாரர்கள் தாக்காமல் நாசுக்காக வலிக்காமல் கருத்து சொல்கிறார்கள். ஓ.பி.எஸ், ஜெயக்குமார் போன்ற அமைச்சர்கள் தான் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதிலும் அமைச்சர் செல்லூர் ராஜூ, சவுந்தர்யாவையும், அவரது கணவர் விசாகனையும் பேச அவசியம் என்ன? கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதிலுள்ள அரசியல் புரிகிறது.

ஈ.வெ.ரா.வை புகழ்ந்த மாதிரியும் ஆயிற்று. ரஜினியை விமர்சித்த மாதிரியும் ஆயிற்று. திமுக பாரம்பரிய குடும்பத்தைச் சேர்நத விசாகனின் பெயரை இழுத்ததின் மூலம் திமுகவை தர்மசங்கடப்படுத்திய மாதிரியும் ஆயிற்று. பாவம் திமுக தேள் கொட்டிய நிலையில் உள்ளனர்.

நீண்டகாலமாக ஈ.வெ.ரா.வை அதிமுகவுடன் இணைத்து யாருமே பார்த்ததில்லை. ஜெயலலிதாவின் வாழ்க்கைகளும், கொள்கைகளும் ஈ.வெ.ரா.வின் அரசியலும், எதிர் எதிர் துருவங்கள். மேலாக, பிஜேபியும், அதிமுகவும் தோழமை கட்சிகள் என்கிறபோது, ஜெயலலிதா வழி வந்த அமைச்சர்கள் இன்று இப்படி பேசுவதற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? ஒருவேளை அதிமுகவை, பிஜேபி இரண்டாவது பட்சமாக நடத்தும் என்கிற சந்தேகமா?

இவ்வாறு கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் நல்ல இடம் கிடைக்கும்: மெஹ்ரின் நம்பிக்கைதமிழில் நல்ல இடம் கிடைக்கும்: ... ரஜினி 168 பட தலைப்பு என்ன? ரஜினி 168 பட தலைப்பு என்ன?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28 ஜன, 2020 - 03:49 Report Abuse
J.V. Iyer ஈ.வே.ராமசாமியை புகழ்ந்து பேசும் அமைச்சர்களை அதிமுகாவிலிருந்து ஒதுக்கி வைக்கலாம். இவர்கள் அம்மா ஜெயலலிதாவின் எதிர்ப்பாளர்கள்.அம்மாவுக்கு துரோகம் செய்பவர்கள். உண்டவீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள்.
Rate this:
dinesh - pune,இந்தியா
27 ஜன, 2020 - 08:31 Report Abuse
dinesh அதெல்லாம் இல்லீங்க, இத்தனை நாளா திமுகவை காட்டித்தான் அதிமுக அரசியல் செய்தது. இன்று தன் இடத்துக்கு போட்டி வருமோ என்ற பயத்தில் யாரை அடிக்கவெனத்தெரியாமல் எல்லாரையும் போட்டு கும்மிக்கொண்டிருக்கிறார்கள்
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
26 ஜன, 2020 - 14:53 Report Abuse
Anbu வாயைப் புண்ணாக்கிக்காதீங்க அம்மணி .....
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
26 ஜன, 2020 - 13:21 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam இந்தப் பெண்ணின் கருத்துக்களை பெரிதுபடுத்த வேண்டாம். ஏனெனில், இவருக்குத் தமிழகத்தைப் பற்றிய அறிவு மிகவும் குறைவு.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
28 ஜன, 2020 - 04:06Report Abuse
meenakshisundaramஆமாம் .பாணர்களுக்கு 'பூணூல்' போடும் அறிவாளிகள்(?) இருக்கும் இடமே தமிழகம் .அதிலே இந்த பெண்மணியின் குரல் கேட்காமலிருக்கலாம் ,ஆனால் மற்ற மாநிலங்களில் கேட்கும் ....
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
26 ஜன, 2020 - 12:30 Report Abuse
meenakshisundaram இந்த கூட்டத்துக்கு 'மேல் மறுவத்தூர் ,தருமையாதீனம் ,குன்றக்குடி போன்ற மடங்கள் இருக்கும் இடம் தெரியாது போல அதும் முன்னாலேயும் போயி கத்த வேண்டியது தானே ?
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in