Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வனில் எம்.ஜி.ஆர்

18 ஜன, 2020 - 12:53 IST
எழுத்தின் அளவு:
MGR-in-Ponniyin-Selvan

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்பது எம்.ஜி.ஆரின் கனவாக இருந்தது. போஸ்டர் வரை வந்து அந்தப் படம் கைவிடப்பட்டது. இன்றைய தலைமுறையினர் எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.

சனீஷ்வர் அனிமேஷன்ஸ் நிறுவனம் பொன்னியின் செல்வன் நாவலை அனிமேஷன் படமாக தயாரித்து வருகிறது. பல பாகங்களாக தயாராகும் இந்த படத்தின் முதல் பாகம். வந்தியத்தேவன் என்ற பெயரில் தயாராகி உள்ளது. இதில் வந்தியத்தேவன் கேரக்டர் எம்.ஜி.ஆர் தோற்றத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

4 ஆண்டுகளாக நடைபெற்ற பணி நிறைவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்றை இக்குழு வெளியிட்டுள்ளது. ரமேஷ் தமிழ்மணி இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி இந்தப் படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார்.

தவச்செல்வனின் இயக்கத்தில் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இந்த ஆண்டு பல்வேறு இந்திய மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். வந்தியத்தேவனின் அறிமுகப் பாடல் ஒன்று எம்.ஜி.ஆர். பிறந்த நாளையட்டி நேற்று வெளியிடப்பட்டது. உலகம் என் உலகம் நான் உத்தரவிட்டால் விடியும் என்று தொடங்கி ஒவ்வொரு நொடியும் வைரம் என்றால் காலம் புதையல்தானே; ஒவ்வொரு உள்ளமும் அரியணை என்றால் நிரந்தர அரசன் நானே! என்று நிறைவடைகிறது. படம் விரைவில் வெளிவருகிறது.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
நார்வே திரைப்பட விழா விருதுகள் அறிவிப்புநார்வே திரைப்பட விழா விருதுகள் ... ‛குருதி ஆட்டம்' பிரச்சினைகள் முடிந்தது: இயக்குனர் விளக்கம் ‛குருதி ஆட்டம்' பிரச்சினைகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

19 ஜன, 2020 - 09:34 Report Abuse
Surendran https://youtu.be/wFPFo2oLknc
Rate this:
PR Makudeswaran - Madras,இந்தியா
18 ஜன, 2020 - 18:23 Report Abuse
PR Makudeswaran எம் ஜி ஆரை இனியும் எத்தனை காலத்திற்கு கட்டி இழுக்க வேண்டும் என்று தெரியவில்லையே
Rate this:
18 ஜன, 2020 - 18:09 Report Abuse
KARTHIK N ஒரு லிங்க் தர முடியாதா?
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
18 ஜன, 2020 - 15:59 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam நிச்சயம் வெற்றி நடைபோடும். என்றாலும், வாழ்த்துக்கள்.
Rate this:
RAJA - chennai,இந்தியா
18 ஜன, 2020 - 15:55 Report Abuse
RAJA பொன்னியின் செல்வன் புரட்சி தலைவரின் கனவு . அதை அனிமேஷன் படமாக எடுத்துள்ள இயக்குனர் தவச்செல்வனுக்கு பாராட்டுக்கள் .
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in