Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'மாறா'வுக்காக மீண்டும் இணைந்த மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத்

13 ஜன, 2020 - 18:59 IST
எழுத்தின் அளவு:
Madhavan---shraddha-srinath-to-work-again

கடந்த 2௦15ல் மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த 'சார்லி' படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை கொண்டது. ஒரு மனிதன், எந்நேரமும் உற்சாகமாக, எதையும் பாசிடிவாக எடுத்துக்கொள்பவனாக இருக்க முடியுமா என்கிற ஆச்சர்யத்தை படம் முழுவதும் நிரப்பினார் துல்கர் சல்மான். படத்தில் கதாநாயகியாக நடித்த பார்வதியும் 'டெஷா' என்கிற கேரக்டரில் சிறப்பாக நடித்திருந்தார். மார்டின் பறக்கத் என்பவர் இயக்கிய இந்தப்படம் பல விருதுகளை குவித்தது.

இந்தப்படம் வெளியான சில மாதங்களில் இதை தமிழில் ரீமேக் பண்ணப்போவதாகவும் அதில் மாதவன் தான் நடிக்க இருக்கிறார் என்றும் இயக்குனர் ஏ.எல்.விஜய் அந்தப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் சொல்லப்பட்டது. அதன்பின் அந்தப்படம் பற்றிய பேச்சையே காணவில்லை.

இந்தநிலையில் இந்தப்படம் தற்போது 'மாறா' என்கிற பெயரில் ரீமேக்ககிறது.. மாதவன் ஹீரோவாக நடிக்கும் இந்தப்படத்தை குறும்பட இயக்குனர் திலீப் குமார் என்பவர் இயக்குகிறார். பார்வதி கேரக்டரில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் அபர்ணா கோபிநாத் நடித்த கேரக்டரில் ஷிவதாவும் நடிக்கின்றனர். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விக்ரம் வேதா படத்தை தொடர்ந்து இந்தப்படத்திலும் மாதவனும் ஷ்ரத்தாவும் இணைந்து நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எப்.ஐ.ஆரில் சிக்ஸ் பேக்குடன் விஷ்ணு விஷால்எப்.ஐ.ஆரில் சிக்ஸ் பேக்குடன் விஷ்ணு ... இரு பட பஞ்சாயத்து! இரு பட பஞ்சாயத்து!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in