Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் அஜித் டெக்னாலஜி ப்ரியர்: ஆதித்யா மேனன்

12 ஜன, 2020 - 11:46 IST
எழுத்தின் அளவு:
ajith-had-passion-with-technology-says-aadhithya-menon

நடிகர் அஜித் நடித்த படங்களான பில்லா, அறிந்தும் அறியாமலும் படங்களில் அவரோடு இணைந்து நடித்தவர் நடிகர் ஆதித்யா மேனன். அவர், தற்போது நடிகர் ரஜினி நடித்து வெளியாகி இருக்கும் தர்பார் படத்தில் நடித்திருக்கும் சுனில் ஷெட்டிக்கு குரல் கொடுத்து இருக்கிறார்.


தர்பார் படத்தில் சுனில் ஷெட்டிக்கு டப்பிங் கொடுத்தது மற்றும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்தது குறித்தும் ஆதித்யா மேனன் கூறியிருப்பதாவது:


நடிகர் ரஜினி நடித்திருக்கும் படமான தர்பார் படத்தில் சுனில் ஷெட்டி நடிக்கிறார். அவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்க வேண்டும் என சொல்லி என்னை அழைத்தனர். ரொம்பவும் யோசித்தேன். பின், ரஜினி படம் என்பதால், தவிர்க்க-மறுக்க முடியாமல் அதை ஒப்புக் கொண்டேன். இந்தப் படத்தில், எனக்கு நடிக்க வாய்ப்பு இல்லை என்பதால், சுவாரஸ்யமான அனுபவம் என்று எதுவும் இல்லை.


ஆனால், நடிகர் அஜித்துடன் நடித்த படங்களில், அவரோடு நான் சேர்ந்தே நடித்திருந்ததால், எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. நடிகர் அஜித்தைப் பொறுத்த வரை, அவர் நடிப்பைக் காட்டிலும் டெக்னாலஜி மீது அதீத ஆர்வம் கொண்டவர். அவரோடு இருக்கும் போது, அவர் லேட்டஸ்ட் டெக்னாலஜி குறித்தே பேசிக் கொண்டிருப்பார். கேஜட்ஸ்களை எப்போதும் வைத்திருப்பார். அவருடைய வீடே, ஆட்டோமைஸ்டாகி இருக்கிறது. கேஜட்ஸ்கள் நிறைந்து இருக்கும். ஸ்மார்ட்ஸ் தொழில் நுட்பத்தை வீட்டின் ஓவ்வொரு பகுதியிலும் பார்க்கலாம். கதவு திறப்பது முதல், ஜன்னல் ஸ்கிரீன் அகற்றுவது வரை எல்லாமே வாய்ஸ் கமாண்டிலேயே நடக்கும். என்னுடைய நண்பர் ஒருவர்தான், நடிகர் அஜித் வீட்டுக்குச் சென்று, ஸ்மார்ட் டெக்னாலஜியை வீடு முழுக்க செயல்படுத்தினார். இந்தியாவில் இப்படி ஒரு நடிகரை பார்க்க முடியாது.



Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லன் அரவிந்தசாமி?மாநாடு படத்தில் சிம்புவுக்கு ... என்ன ஒரு ஞாபக சக்தி; அஜித்தை நினைத்து வியக்கும் விஜே ரம்யா என்ன ஒரு ஞாபக சக்தி; அஜித்தை நினைத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in