Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » நட்சத்திரங்களின் பேட்டி »

படிப்புக்கும், சாதனைக்கும் சம்பந்தம் இல்லை: டிரைவராக இருந்து தயாரிப்பாளரான ஆதி 'பளிச்'

03 ஜன, 2020 - 12:19 IST
எழுத்தின் அளவு:
A-Driver-turn-as-Producer:-Aadhi-interview

எழுத, படிக்க தெரியாமல், இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்தவர், ராஜபாளையத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ஆதி. வறுமை, குடும்ப சூழலால், தன் சினிமா கனவுகளை சென்னையிலேயே புதைத்து விட்டு சென்றவர், தற்போது தயாரிப்பாளராகி, தன் சினிமா கனவை, மகன்கள் வாயிலாக நனவாக்கியுள்ளார். அவருடன் பேசியதிலிருந்து...

உங்களை பற்றி சொல்லுங்கள்?
சொந்த ஊர் ராஜபாளையம். லாரி கிளீனராக இருந்து, டிரைவர் ஆனேன். 2003ல், சினிமாவில் இயக்குனர் ஆகும் கனவோடு, சென்னை வந்து, ராமராஜனிடம் உதவி இயக்குனரானேன். எழுத, படிக்க தெரியாததால், சினிமா ஆசை கனவானது.திருமணம், மூன்று பிள்ளைகள், குடும்ப வறுமை காரணமாக, ஓட்டுனராக இருந்து குடும்பத்தை நடத்த முடியவில்லை. மீண்டும் சொந்த ஊருக்கே சென்றேன். கண்மாயை ஒப்பந்தம் எடுத்து, பணம் சம்பாதித்தேன்.

சினிமா கனவு நனவானதா?

எனக்கு, விக்னேஷ்வரி என்ற ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்தவன் ஆதவன்; இளையவன் அச்சயன். எனக்கு முதல் மகன் பிறந்த போதே, நான் உருவாக்கிய கதைக்கு, 'விருது' என பெயரிட்டு, அதை டில்லியில் பதிவு செய்தேன்.என் பிள்ளைகளை, ஆரம்பத்தில் இருந்தே சினிமா ஆசையோடு தான் வளர்த்தேன். சினிமாவுக்கு தேவையானதை கற்றுக்கொள்ள வைத்தேன். எழுத, படிக்கத் தெரியாததால் தான், என் சினிமா கனவு நிறைவேறவில்லை.


என் பிள்ளைகளை, அனைத்தையும் கற்க வைத்தேன். மூத்தவன், மீனம்பாக்கத்தில், 'விஷுவல் கம்யூனிகேஷன்' படிக்கிறான்.இளையவன் பிளஸ் 2 படிக்கிறான். சிலம்பத்தில், இரண்டு மகன்களும், தங்க பதக்கம் பெற்றுள்ளனர்.முதலில் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினர் ஆனேன். சேர்த்த பணம், 65 லட்சம் ரூபாயையும், வங்கியில், 25 லட்சம் ரூபாய் கடனாகவும் பெற்று, விருது என்ற பெயரில் படம் எடுத்தேன்.இப்படத்தை, நானே தயாரித்து வினியோகித்தேன். என் மூத்த மகன் ஆதவன் இயக்க, இளைய மகன் அச்சயன் நாயகனாக அறிமுகமானான். என் கனவை, என் மகன்கள் மூலம் நிறைவேற்றினேன். படிப்புக்கும், சாதனைக்கும் சம்பந்தம் இல்லை.



உங்கள் மனைவி தான், சினிமா தயாரிக்க காரணமாக இருந்தாரா?
எனக்கு எழுத, படிக்க தெரியாது என்பதால், நான் யோசித்து வைத்த கதையை, நண்பர் மூலம் எழுதி வைத்தேன். ஒரு நாள், எழுதி வைத்திருந்த கதை நோட்டுகளை, எடைக்கு போட்டனர். கடைக்காரர் அதை படித்து, என் வீட்டாரிடம் காட்டினார். அதைப் படித்து பார்த்த என் மனைவி, 'இவ்வளவு நல்ல கதைகள் கண்டிப்பாக ஜெயிக்கும். நீ படம் தயாரிக்கலாம். நம் பிள்ளைகளே நடிக்கட்டும்' என்றாள். சினிமா கனவோடு அலைந்தோரை தேடிப்பிடித்து, அவர்களை எல்லாம் நடிகனாகவும், தொழில்நுட்ப கலைஞர்களாகவும், விருது படத்தில் பணியாற்ற வைத்தேன்.

தியேட்டரில் படம் போடவில்லை என, சண்டையிட்டது ஏன்?
விருது படத்திற்காக, தியேட்டர்களை நானே வாடகைக்கு எடுத்து, படம் வெளியிட்டேன். விருது படத்திற்கு டிக்கெட் கேட்டவர்களை, 'ஹீரோ படம் பாருங்கள்' என, தியேட்டர்காரர்களே கூறினர்.நான் போய் டிக்கெட் கேட்ட போதும், அப்படியே கூறினர். நான் வாங்கிய வாடகை வீட்டில், நான் வசிக்காவிட்டால் எப்படி? இப்போது, என் படம், சென்னை, பழநி, நாகர்கோவிலில் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர்கள் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் படத்தை திரையிடுவதை, ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும். சின்ன படத்திற்கு, அதிக முன்னுரிமை தரப்படுவதில்லை. இதனால் தான், சிறு படத் தயாரிப்பாளர்கள், காணாமல் போகின்றனர்.இன்று பெரிய படத் தயாரிப்பாளர்கள் எல்லாம், ஒரு காலத்தில் சிறுபடத் தயாரிப்பாளர்களாக இருந்தவர்கள் தான். அதேபோல், 'கியூப்'பில் படத்தை வெளியிடுவதை, சுலபமாக்க வேண்டும்.

தயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கை குறித்து?
சங்கத்திற்கு என, ஒரு தலைவர் கட்டாயம் இருக்க வேண்டும். விஷால் உட்பட யார் வந்தாலும் சரி. தேனை எடுத்தவர் அதை நக்கித் தான் தீருவார். அதனால், தலைவராக யார் வந்தாலும், அவர்கள் செய்வதை தான் செய்வர்.எந்த ஒரு பிரச்னை என்றாலும், முறையிட ஒரு தலைவர் இருந்தால் தான், சங்கம் உயிர்ப்பாக இருக்கும்; அதன் மூலம் தயாரிப்பாளர்களும் உயிரோடு இருப்பர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியின் தர்பார் அரசியல் படமா?இயக்குனர்  ஏ.ஆர்.முருகதாஸ் புதிய தகவல்ரஜினியின் தர்பார் அரசியல் ... சினிமா ஆசை இருந்தாலும் பொருளாதாரத்தையும் யோசிக்கணும் : ‛சின்னதம்பி' மார்த்தாண்டன் சினிமா ஆசை இருந்தாலும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in