Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரிஜினலாவே நான் வில்லன்: ‛தர்பார் டிரைலர் வெளியீடு

16 டிச, 2019 - 19:25 IST
எழுத்தின் அளவு:
Darbar-Trailer-out

ரஜினியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் முதன்முறையாக இயக்கி உள்ள படம் ‛தர்பார். நீண்ட இடைவெளிக்கு பின் ரஜினி போலீசாக, மும்பையில் பணியாற்றும் போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இதன் டிரைலர் சற்று தாமத்திற்கு பின் மாலை 6.55 மணியளவில் வெளியிடப்பட்டது. 1.45 நிமிடம் ஓடும் இந்த டிரைலர் முழுக்க ரஜினியின் ஆக்ஷன், பஞ்ச் டயலாக் என அவருக்கே உரிய ஸ்டைலில் வெளியாகி உள்ளது.

ரவுடி முழுக்க ஒரு இடத்தில் குழுமியிருக்க, அந்தரத்தில் ரஜினி பறந்து வந்து ரவுடிகளை துவம்சம் செய்வது மாதிரி டிரைலரின் ஆரம்ப காட்சிகள் உள்ளன. ‛‛போலீஸா அவன் கொலைகாரன் என இவரை பார்த்து மிரளும் அளவுக்கு இவரின் போலீஸ் நடவடிக்கை உள்ளது. மும்பை தாதாவாக வரும் சுனில் ஷெட்டி, தன் அடாவடியால் போலீஸிற்கு பயம் காட்டும் படி காட்சிகள் உள்ளன. நயன்தாரா இரண்டு-மூன்று காட்சிகளில் வந்து போகிறார். சும்மா கிழி பாடலுக்கு ரஜினி ஆட்டம் போட்டுள்ளார்.

இவற்றுடன், ‛‛போலீஸ் என்பது வேலையல்ல, பாதுகாக்கவே வாழ்கிறோம், சேவைக்காக உயிரையும் விடணும்..., போலீஸ் கிட்ட லைப்ட்ல வச்சுக்கோ, ரைட்லா வச்சுக்கோ ஆனால் ஸ்டிரைட்டா மட்டும் வச்சுக்க வேண்டாம்... என போலீஸின் கம்பீரத்தை பஞ்ச்சாக உதிர்த்துள்ளார் ரஜினி. ‛‛ஒரிஜினலாகவே நான் வில்லன் மா, இது எப்படி இருக்கு... ஐயம் ஏ பேட் காப் என உரக்க சிரித்தபடி டிரைலரை முடித்துள்ளனர்.

மும்பை போலீஸ் கமிஷனர் ரஜினிக்கும், அங்குள்ள தாதா சுனில் ஷெட்டிக்கும் இடையே நடக்கும் யுத்தம் தான் ‛தர்பார் பட கதை என டிரைலரை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. இது வழக்கமான போலீஸ் - ரவுடி கதை என்றாலும் கூட இதை ரஜினிக்கு ஏற்றபடி முருகதாஸ் எப்படி இயக்கி உள்ளார் என்பது படம் வெளியான பின்பே தெரியும். இருப்பினும் டிரைலரில் ஓரளவுக்கு ரஜினியின் ஸ்டைலான நடிப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகளை வைத்து அசத்தி இருக்கிறார் முருகதாஸ்.


டிரெண்டிங்கில் தர்பார்
தர்பார் வெளியான ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே 10 லட்சம் பார்வைகளை கடந்ததோடு, டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது.


Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பழமொழி சொல்லவே பயப்படும் பாக்யராஜ்பழமொழி சொல்லவே பயப்படும் பாக்யராஜ் புகைப்பிடித்த படி போட்டோ: சர்ச்சையில் தர்ஷன் புகைப்பிடித்த படி போட்டோ: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

G.Raman - madurai,இந்தியா
17 டிச, 2019 - 18:56 Report Abuse
G.Raman ஜெயா 1996 ல தோல்வி அடைந்தவுடன் ஏன் ஆட்சி காலத்தில் நடந்த தவறுகளுக்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் இன்னி அந்த தவறுகள் நடக்காது என்றார் ரஜினி அதன் பிறகு 2001-2006 ஜெயாவை தைரிய லட்சுமி என்று பாராட்டினார்
Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
17 டிச, 2019 - 10:24 Report Abuse
kowsik Rishi sir சிவாஜி ராவ் கைக்கவாட் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டின் வில்லன் தான் என்று நீங்கள் தீயசத்தி மு. கருணாநிதியோடு கைகோர்த்து செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு தீங்கு அரசியல் வன்கொடுமைக்கு துணை போனீரோ நீங்கள் வில்லன் தான் . பாவிகளே எல்லாருமா சேர்ந்து தமிழ் நாட்டின் சொத்து இந்தியாவின் நம்பிக்கை செல்வி ஜெ ஜெ வை அழித்துப்போட்டுவிட்டீர்களே அவரை இந்த ஐந்து ஆண்டாவது வாழவேண்டியவர்
Rate this:
16 டிச, 2019 - 21:37 Report Abuse
ilaiyaraja muthu தலைவரை என்ன பண்ணி வச்சிருக்கான் தெரியலியே...... டிரைலர் ஒரு மார்க்கமாதான் இருக்கு......முருகதாஸு சொதப்பி இருந்த அவ்ளோதாண்டி நீயு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in