Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கத்தி கதை வழக்கு: விஜய் விடுவிப்பு

11 டிச, 2019 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Kaththi-story-issue:-Vijay-released-from-case

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், தஞ்சை விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து 'தாகபூமி' என்ற குறும்படத்தை தயாரித்து, இயக்கி உள்ளார். இந்த கதையை திரைப்படமாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கத்தி படம் வெளிவந்தது. இந்தப் படம் தனது தாகபூமி கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக முருகதாஸ், படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், நடிகர் விஜய் ஆகியோர் மீது தனக்கு இழப்பீடு வழங்கக்கோரி, தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2014ல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் மற்றும் கத்தி படக்குழுவினர் சார்பில் மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வருமாறு:

இந்த வழக்கில் நடிகர் விஜய் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோருக்கு எந்த தொடர்பும் இல்லை. கதை தொடர்பான குற்றச்சாட்டில் தயாரிப்பு நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை. எனவே, படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தவிர்த்து மற்றவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு மீண்டும் தஞ்சை ஜேஎம் 1 நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பப்படுகிறது.

கத்தி திரைப்படம் மற்றும் தாகபூமி குறும்படம் இரண்டையும் மாஜிஸ்திரேட் பார்க்க வேண்டும். புகார்தாரரின் குற்றச்சாட்டிற்கு போதுமான முகாந்திரம் இருப்பதாக தெரியவந்தால், காப்பிரைட் சட்டப்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கதை எழுதும் நாயகன்!கதை எழுதும் நாயகன்! பாலா - அம்ருதா தம்பதிகளுக்கு விவாகரத்து பாலா - அம்ருதா தம்பதிகளுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in