Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஞ்சலி நல்ல பொண்ணு, ஆனால் ஜெய் தான்... : தயாரிப்பாளர்

22 நவ, 2019 - 19:55 IST
எழுத்தின் அளவு:
Producer-Nandakumar-about-Actor-Jai

கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தயாரிப்பாளர் நந்தகுமார். தமிழில் சில படங்களையும் தயாரித்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்திருக்கும் அஞ்சலி - ஜெய் பற்றி அளித்துள்ள பேட்டி திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கூறுகையில், பலூன் படத்தை நான் தயாரித்தேன். ஜெய்யால் பல பிரச்னைகள், இந்தப்படம் நஷ்டம் அடைய முழுக்க முழுக்க அவர் தான் காரணம். என் வாழ்வில் இனி படங்கள் தயாரிக்க கூடாது என முடிவெடுத்ததும் இவரால் தான்.

கொடைக்கானலில் பலூன் படம் நடந்தபோது ஜெய் - அஞ்சலி தங்குவதற்காக, ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டுக் கொடுத்தோம். இரு அறைகள் பனிரெண்டாயிரம் ரூபாய்க்கு புக் செய்யப்பட்டன. ஆனால் அந்த அறையை அவர் பயன்படுத்தவே இல்லை. சரி கேன்சல் செய்யலாம் என்றால் அதற்கும் உடன்படவில்லை. தனி கேரவன் தான் வேண்டும் என அடம்பிடித்தார். படப்பிடிப்புக்கு ஒழுங்காக வரமாட்டார்.

ஒருநாள் படப்பிடிப்பின்போது இயக்குனர் சினிஷ், அஞ்சலியை பெயர் சொல்லி அழைத்தார். மேடம் என அழைக்கவில்லை என்பதற்காக அஞ்சலி கூட அதை பொருட்படுத்தவில்லை. ஆனால், ஜெய் கோபப்பட்டார். அதோடு அஞ்சலிக்கு வயிற்று வலி என கூறி ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி சென்னை சென்றுவிட்டனர். இதனால், மொத்த படபிடிப்பும் நின்று போனது. படப்பிடிப்பை நிறுத்துவேன் என்று சவால் விட்டார், அதை செய்தும் காட்டினார். இப்படி படப்பிடிப்பின் போது பல டார்ச்சர் செய்தார் ஜெய்.

அஞ்சலி நல்ல மனம் கொண்டவர். படப்பிடிப்பு, புரொமோஷன் என எல்லாவற்றுக்கு நன்கு ஒத்துழைத்தார். ஆனால் அஞ்சலியை குழப்பி, பலமுறை படப்பிடிப்புக்கு ஜெய் இடையூறு விளைவித்தார்.

இவ்வாறு நந்தகுமார் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் வைபவ்மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் ... ஷிரினின் கேக், ரெசிபி! ஷிரினின் கேக், ரெசிபி!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Jayvee - chennai,இந்தியா
26 நவ, 2019 - 11:07 Report Abuse
Jayvee இவன் சொந்தக்காரன் சினிமாவில பெரிய ஆளுண்ணுகிற திமிரு...
Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
25 நவ, 2019 - 17:10 Report Abuse
இந்தியன் kumar சரி இல்லாதவர்களை நிராகரியுங்கள்.
Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
24 நவ, 2019 - 15:48 Report Abuse
ஆரூர் ரங் ஒரு காலத்தில் நடிகர் நடிகைகள் தயாரிப்பாளரை முதலாளி என அழைத்து கைகட்டி நிற்பார்களாம் அது அந்தக் காலம்
Rate this:
AYYA - Chennai,இந்தியா
24 நவ, 2019 - 09:12 Report Abuse
AYYA மேடம் என்றுதான் கூப்பிட வேண்டுமா?
Rate this:
samkey - tanjore,இந்தியா
24 நவ, 2019 - 06:27 Report Abuse
samkey அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பார்கள். இப்படி அடுத்தவர் கஷ்டம் தெரியாமல் ஆடுபவர்கள் காணாமல் போய் விடுவார்கள்.
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in