Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல் எனது திரையுலக அண்ணன்: ரஜினி

08 நவ, 2019 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Kamal-is-my-elder-brother-in-cinema-says-Rajini

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம் மற்றும் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், எனது கலை உலக அண்ணன் கமல்ஹாசன். நேற்றும், இன்றும் அவருக்கு மறக்க முடியாத நாள். நேற்று அவருடைய தந்தைக்கு சிலை திறந்து வைத்தார். இன்றைக்கு அவரின் புது அலுவலகம், கலையுலக தந்தை கே.பாலசந்தரின் சிலையை திறந்து வைத்தார். கே.பாலசந்தர் கமலுக்கு மட்டுமல்ல என்னை போன்ற பலருக்கும் தந்தை, பிதமாகன், குருவாக இருந்தவர்.

கமலுக்கு அரசியலுக்கு வந்தாலும் தாய்வீடான சினிமாவை விட மாட்டார். கலையை உயிராக கொண்டிருப்பவர். தொழில்நுட்பம் இல்லாத காலத்திலேயே ‛விக்ரம்' படத்தை எப்படி இயக்கினார் என வியந்தேன். ‛தேவர் மகன்' படம் சினிமாவின் காவியம். அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்தவிட்டு அன்றைக்கு இரவே கமலின் வீட்டிற்கு சென்று பாராட்டினேன்.

நான் அதிகமுறை பார்த்த படங்கள் ‛காட்பாதர், திருவிளையாடல் ஹேராம்'. அதிலும் ஹே ராம் படத்தை 30 - 40 முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போது ஒவ்வொரு விதமான அனுபவம் தந்தது.

பாலசந்தரின் சிலையை திறந்து வைத்தபோது அவருடன் பழகிய நாட்கள் வந்து சென்றன. தமிழ் மட்டும் கற்றுக்கொள், உன்னை எங்க கொண்டு போய் உட்கார வைக்கிறேன் பார் என பாலசந்தர் சொன்னது, தமிழ்நாட்டு மக்களை அப்படி சொல்வதாக எண்ணினேன். இவருக்கு பிடித்த குழந்தை என்று சொல்ல மாட்டேன் கலைஞன் கமல்ஹாசன். அவரின் ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்து கொண்டே இருப்பார். கமலுக்கு மற்றுமொரு தகப்பன் அவர்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ஒப்பந்தம் : கமல்ரஜினிக்கும், எனக்கும் ரகசிய ... தமிழில் நடிகராக அறிமுகமாகும் கன்னட இயக்குனர் தமிழில் நடிகராக அறிமுகமாகும் கன்னட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

vbs manian - hyderabad,இந்தியா
09 நவ, 2019 - 10:24 Report Abuse
vbs manian நல்ல அன்னான் தம்பி அன்னான் காவி என் நிறம் அல்ல என்றார். தம்பி காவி சாயம் பூசாதே என்கிறார்.
Rate this:
blocked user - blocked,மயோட்
09 நவ, 2019 - 10:24 Report Abuse
blocked user கமலைப்போல அவரது மானசீக வாத்தியார் முகவுக்கு கூட இந்த அளவுக்கு காமானுபவம் கிடையாது. இதில் இரஜினியெல்லாம் போட்டியிட வாய்ப்பே இல்லை.
Rate this:
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
09 நவ, 2019 - 08:43 Report Abuse
Natarajan Attianna சினிமா காரர்களால் தமிழ் நாடு இன்னும் சீரழிய மீதி உள்ளது இருவரும் சேர்ந்து அதை நிறைவேற்றுங்கள்
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
09 நவ, 2019 - 08:16 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அண்ணனைச் சந்தையில் பார்த்தால், தம்பி எப்படிப்பட்டவர் என்று பிறர் சொல்லத் தேவையில்லை.
Rate this:
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
09 நவ, 2019 - 02:46 Report Abuse
Rajagopal அண்ணன்களுக்கெல்லாம் நான் தம்பி. தம்பிகளுக்கெல்லாம் நான் அண்ணன்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in