Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஷில்பா கணவருகு சிக்கல்: நேரில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன்

29 அக், 2019 - 18:48 IST
எழுத்தின் அளவு:
Trouble-for-Rajkundran

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி, அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது. இது ஹிந்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பாஜ்கர் என்ற படத்தில் அறிமுகமாகி, அந்தப் படம் வெற்றியடைந்ததும், இந்தியா முழுவதும் அறியப்படும் நடிகையானார் நடிகை ஷில்பா ஷெட்டி. அவர், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என எல்லா மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து பிரபலமானார்.

இந்நிலையில், அவரது கணவரான ராஜ் குந்த்ரா, பிரபல தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான இக்பால் மிர்சியுடன் தொழில் ரீதியில் கூட்டணி அமைத்து செயல்பட்டார் என்பதையும், அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டார் என்பதையும் அமலாக்கத் துறை விசாரணையில் கண்டறிந்திருக்கிறது.

ஏற்கனவே ஆர்.கே.டபிள்யூ என்ற நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ரஞ்சித் பிந்த்ரா, இன்னொரு இயக்குநர் பாபா தேவன் ஆகிய இருவரையும், அமலாக்கத் துறையினர் விசாரணைக்கு அழைத்து கைது செய்தனர். அவர்கள் இருவரும், நடிகை ஷில்பா ஷெட்டி இயக்குநராக இருக்கும் எஸென்சியல் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்து பணப் பரிவர்த்தைகளை மேற்கொண்டதை, அமலாக்கத் துறையினர் பல கட்ட விசாரணைகளுக்குப் பின் கண்டறிந்தனர்.

இந்நிலையில், அந்த நிறுவனத்தை முன்னின்று நடத்தி வந்த ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ராவை, அமலாக்கத் துறையினர் வளைத்துள்ளனர். அவருக்கு அந்நிய செலாவணி மோசடிக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகப்படும் அமலாக்கத் துறை, ராஜ்குந்தராவை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பி அழைத்துள்ளது. இதன்படி, வரும் நவ., 4ல், அவர் அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் ஆஜர் ஆக வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மோகன்லால் - சஞ்சய் தத் சந்திப்பின் பின்னணி இதுதான்மோகன்லால் - சஞ்சய் தத் சந்திப்பின் ... ரகுலின் கவர்ச்சி குத்தாட்டம் ரகுலின் கவர்ச்சி குத்தாட்டம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in