Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழ் பெண்கள் என்றால் இளக்காரமா?: கொதிக்கும் ஐஸ்வர்யா

29 அக், 2019 - 13:33 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Rajesh-angry

தமிழ் சினிமாவில்தான் தமிழ் பெண்களின் நிலைமை மோசமாக இருக்கிறது என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார். அவர் அளித்திருக்கும் பேட்டி: இந்தி படங்களில் இந்தி பெண்கள் நடிக்கின்றனர். மலையாளத்துல கேரளப் பெண்கள் நடிக்கின்றனர். ஆனா, தமிழ் படங்களில் மட்டும் தமிழ் பெண்கள் நடிப்பதில்லை.

நடிகைகளான ரெஜினா, சமந்தா ரெண்டு பேரும் நல்லா தமிழ் பேசுவாங்க. ஆனா, ஆரம்பத்துல அவங்களுக்குத் தமிழ்ல வாய்ப்புகள் கிடைக்கலை. தெலுங்குல மாஸ் ஹீரோயினா ஆனதுக்குப் பின்தான், தமிழ் சினிமா சிவப்புக் கம்பளம் விரிச்சு அவங்களை வரவேற்றது. தன்ஷிகா நல்லா தமிழ் பேசுற ஹீரோயின். ஆனா, அவங்களுக்குப் படங்கள் இல்லை. ஜனனி ஐயர், வரலட்சுமி சரத்குமார் இவங்க எல்லாரும் தமிழ் பேசுறவங்களா இருந்தும், பெரிய படங்கள்ல நடிக்கலை.

பெமினா மிஸ் இந்தியா அழகிப் போட்டியில பட்டம் வென்ற அனுக்ரீத்தி வாஸ், திருச்சிப் பொண்ணு. மிஸ் இந்தியா பட்டம் வாங்குனதுக்கு அப்புறம்தான் அனு க்ரீத்தி, யார்னு நமக்குத் தெரிய வந்துச்சு. இந்த மாதிரி அனு க்ரீத்திகள் நிறைய பேர் இங்க இருக்காங்க. நாமதான் அவங்களை அடையாளம் கண்டுக்காம இருக்கோம். இது எல்லாத்தையும் மீறி, நம்ம பொண்ணுங்க நடிக்க வந்தா, அவங்களை மதிக்க மாட்டாங்க. ஒழுங்கா சாப்பாடு போட மாட்டாங்கறாங்க. பாம்பே பொண்ணுங்களுக்குக் கிடைக்குற மரியாதையைவிட, நமக்கு ஒருபடி குறைவாத்தான் கிடைக்குது.

வடநாட்டுப் பொண்ணுங்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர்ற சினிமா துறையினருக்கு, ஏன் நம்ம ஊர் பொண்ணுங்களை சரியாப் பார்த்துக்கத் தெரியலைங்கிற வருத்தம் எனக்குள்ள நிறையவே இருக்கு. நான் எனக்கு நேர்ந்ததை மட்டும் மனசுல வச்சுக்கிட்டுப் பேசலை. தமிழ் நடிகைகள் எல்லாருக்குமே இதே நிலைமைதான். ஆக, தமிழ் பெண்கள் என்றால் இளக்காரம்.

கதை சார்ந்த படங்களுக்கு நாம யதார்த்தமா இருந்தா போதும். அழகு முக்கியமில்லை. அதுவே கமர்ஷியல் படங்களுக்கு, நாம அழகா இருக்கணும். இல்லைனா, நம்ம ஊர் மக்கள், மீம்ஸ் போட்டு நம்மளை கலாய்ச்சுத் தள்ளிருவாங்க. அதனால, நம்ம ஊரு பொண்ணுங்க, அதிகம் நடிக்க வந்ததுக்குப் பின், ஓர் அமைப்பு ஆரம்பிச்சு பெண்களுக்கான பிரச்னைகளைத் தீர்த்து வச்சா, எனக்கு சந்தோஷம்தான். நான் அதுக்கான எல்லாவிதமான உதவிகளையும் பண்ணுறதுக்கு ரெடி.

இவ்வாறு ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
புதியவர்களிடம் வெட்கப்படாமல் பழகுவேன்: ரகுல்புதியவர்களிடம் வெட்கப்படாமல் ... இயக்குநராகிறார் நடன இயக்குநர் பிருந்தா! இயக்குநராகிறார் நடன இயக்குநர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

meenakshisundaram - bangalore,இந்தியா
05 நவ, 2019 - 03:37 Report Abuse
meenakshisundaram இது சினிமாவிலேயா ?டிவி சேனல் எதுலேயாவது ஒழுங்கா தமிழ் பேசுற பெண்கள் இருக்காங்களா?முதல்லே தமிழர்கள் தங்கள் தாய் மொழியை ஒழுங்கா பேசக்கத்துக்கிடனும்.
Rate this:
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31 அக், 2019 - 18:35 Report Abuse
Ramesh R ஏற்றுக்கொள்கிறேன் - இந்த வரை வளர வேண்டும் என்று விரும்புகிறேன். தமிழ் என் மூச்சு என்று சொல்லும் பல பேர் தன படத்தில் கேரளா மற்றும் வட நாட்டு பெண்களை வைத்து வியாபாரம் செய்கின்றனர்
Rate this:
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
30 அக், 2019 - 16:47 Report Abuse
Subramanian Arunachalam நல்ல உரைக்கிற மாதிரி கேள்வி கேளுங்க அக்கா
Rate this:
S.V.SRINIVASAN - Chennai,இந்தியா
30 அக், 2019 - 11:38 Report Abuse
S.V.SRINIVASAN தமிழ் நாட்டு சாப கேடு என்னென்ன தமிழ் நாட்டில் பிறந்தவர்கள் தமிழ் நன்றாக பேச தெரிந்தவர்கள் புறக்கணிக்க படுவார்கள். இதற்கு காரணம் தற்போதைய தயாரிப்பார்களும், இயக்குனர்களும். தமிழே தெரியாத நடிகைகளை தேடி தேடி பிடித்து வந்து தமிழ் படத்தில் நடிக்க விடுவார்கள்.
Rate this:
Jayvee - chennai,இந்தியா
30 அக், 2019 - 11:07 Report Abuse
Jayvee எமென்டீ மீறு தமிழா ?
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in