Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இயக்குநரான ராதிகா ஆப்தே

29 அக், 2019 - 12:23 IST
எழுத்தின் அளவு:
Radhika-Apte-turn-as-Director

சென்னை: கபாலி பட நடிகை ராதிகா ஆப்தே 'ஸ்லீப் வாக்கர்ஸ்' என்ற படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராதிகா ஆப்தே. திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நாயகியாக நீடிக்க முடியும் என தனது படங்கள் மூலம் நிரூபித்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சிப் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவது இவரது வழக்கம். திரைப்படங்களிலும் துணிச்சலாக பல காட்சிகளில் நடித்து பாராட்டுகளைப் பெற்றவர்.

தமிழில் இவர் டோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன் என சில படங்களில் நடித்துள்ள போதும், கபாலி படம் தான் இவருக்கு மக்களிடையே நல்ல அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் திறமையான நடிகை எனப் பேர் எடுத்த ராதிகா ஆப்தே, தற்போது இயக்குநராகவும் மாறி இருக்கிறார். அவர் ஸ்லீப் வாக்கர்ஸ் என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் குல்சன் தேவய்யா, சஹானா கோஸ்வாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திடீரென இயக்குநரானது குறித்து ராதிகா ஆப்தே கூறுகையில், “நான் இயக்குனரானது திடீரென்று நடந்து விட்டது. இதன் மூலம் ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்று முழுமையாக கற்றுக்கொண்டேன்” என்றார்.

ஸ்லீப் வாக்கர்ஸ் படம் சமூகத்தை கேள்வி கேட்கும் வித்தியாசமான படமாக இருக்கும் எனவும், இந்த படத்தின் மூலம் ராதிகா ஆப்தே திறமையான இயக்குநர் என்ற பேரையும் பெறுவார் எனவும் அப்பட தயாரிப்பாளர் ஹனி ட்ரேஹன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல பாலிவுட் நடிகைஅஜித் படத்தில் நடிக்க மறுத்த பிரபல ... 'விஸ்வாசம்' வழியில் 'பிகில்' ? 'விஸ்வாசம்' வழியில் 'பிகில்' ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in