Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தமிழக முதல்வரை விமர்சித்த மீரா மிதுன் வீடியோ

29 அக், 2019 - 11:56 IST
எழுத்தின் அளவு:
Meera-Mitun-criticize-TN-CM

சென்னை: முதல்வர் வீட்டு குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்திருந்தால் அதை இந்நேரம் மீட்டிருப்பார்கள் என ஆவேசமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித் வில்சனை மீட்கும் முயற்சி கடந்த 4 நாட்களாக நடந்தது. அவர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வர வேண்டும் என திரையுலகப் பிரபலங்களும், பொதுமக்களும் பிரார்த்தனை செய்திருந்தனர். ஆனால் சுஜித் மறைந்துவிட்டார்.

இதுதொடர்பாக மீரா மிதுன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், “எல்லோரும் துரிதமாக வேலை செய்தார்கள். ஆனால், நம் முதல்வர் ஏன் இந்த விசயத்தில் நேரடியாக இறங்கவில்லை என்பது எனக்கு வருத்தத்திற்குரிய ஒன்றாக உள்ளது. இதுவே முதல்வர் அல்லது அவரின் உறவினரின் குழந்தையாக இருந்திருந்தால், இந்நேரம் அதனைக் காப்பாற்றி இருப்பார்கள் அல்லவா. இதே ஜெயலலிதா அம்மா இருந்திருந்தால் துரிதமாக இந்த வேலை நடந்திருக்குமோ என்று எனக்கு தோன்றுகிறது” என மீரா பேசியுள்ளார்.

சமீபகாலமாக பிரபலங்களைத் திட்டி வீடியோ வெளியிடுவதை மீரா வழக்கமாகக் கொண்டிருக்கிறார். நடிகர் கமல், சேரன், முகென் என எல்லோரையும் நேரடியாகத் தாக்கி பேசி அவர் ஏற்கனவே வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது ஒருபடி மேலே போய், தமிழக முதல்வரையே நேரடியாக விமர்சித்து மீரா வீடியோ வெளியிட்டிருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
பிரபாஸை திருமணம் செய்ய விரும்பும் காஜல்பிரபாஸை திருமணம் செய்ய விரும்பும் ... 'மருதநாயகம்' - கமலுக்குப் பதில் விக்ரம் 'மருதநாயகம்' - கமலுக்குப் பதில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Jayvee - chennai,இந்தியா
30 அக், 2019 - 11:08 Report Abuse
Jayvee பிக் பாசில் நடித்த நடிகையெல்லாம் பேசுது..
Rate this:
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
30 அக், 2019 - 09:27 Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அம்மையாருக்கு ஆழ்துளைக் கிணறு பற்றிய அறிவு கொஞ்சம் குறைவு என்று தெரிகின்றது. எல்லாவற்றயும் திரைப்படக் கதைகள் என்று எண்ணிவிட்டார் போலும்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
29 அக், 2019 - 22:52 Report Abuse
Mirthika Sathiamoorthi இதே போன்ற கருத்து பலருக்கும் உண்டு...இது போன்ற ஆளுங்கள் வெறும் வீடியோ பதிவையும் வாட்ஸாப்ப் பதிவையும் வைத்து கருத்து போடுபவர்கள்...போராட்டக்களத்தில் சென்று அங்கு போரடியவர்களின் அருகில் இருந்து பார்த்திருந்தால் உண்மை புரிந்திருக்கும்..சமூக வலைத்தளத்தில் கருத்து போட்டால் தனது ஜனநாயக கடமை முடிந்ததாக கருத்துபவர்களில் இந்த மீரா அம்முனியும் ஒருவர்..அங்கு அவர்கள் மீட்க மேற்கொண்ட நடவடிக்கைள் ஏதாவது தெரியுமா இந்த அம்மையாருக்கு? ...குழைந்தை விழுந்ததை அறிந்து கிராமமே கூடி தீயணைப்பு துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது..அவர்கள் வரும் வரை கிராமமக்கள் கயிறு கட்டி முயற்சித்தனர்..அது முடியாமல் போனது..அடுத்து தீயணைப்பு வீரர்களும் கயிறு கட்டி முயற்சித்தனர்...அது தோல்வியானதால்..மணிகண்டன் வரவழைக்கப்பட்டு அவரின் கண்டுபிடிப்பு உபயோகப்படுத்தப்பட்டது அது தோல்வி பின் IIT பேராசியரின் கண்டுபிடிப்பு முயற்சிக்கப்பட்டது அதுவும் தோல்வி உடனே தேசிய பேரிடர் குழு அழைக்கப்பட்டது..அவர்கள் வருவதற்குள் குழந்தை 60 அடி கீழே போனது...மீட்ப்பு குழுவினர், அவர்கள் வந்து பக்க சுரங்கம் வெட்டி குழந்தையை காக்கும் முறையை ஆரம்பித்தனர். அதற்க்கு தேவையான ரிக் எந்திரம் வரவழைக்க பட்டு..20 அடியில் பெரும் பாறை ..அதை உடைக்கமுடியாமல்..அதைவிட சக்திவாய்ந்த ரிக் எந்திரம் முயற்சி ..அதுவும் முடியாமல் போக பாறையை துளையிட்டு இலகுவாக்கி பாறையை உடைக்க போர் போடப்பட்டது..இதற்குள் குழந்தை இறந்த தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது....இதனை முயற்சிகள்...பல முயற்சிகளை ஆராயமாலா அவர்கள் இருந்திருப்பார்கள்? . மீட்பு பணிதொடங்கிய நிமிடம் முதல் அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் அங்கே முகாம்..அவர்கள் என்ன நிபுணர்களா? அவர்களின் பனி நிபுணர்களின் பரிந்துரையை ஏற்று அவர்களுக்கு தேவையான எல்ல வசதிகளையும் செய்து கொடுப்பது, இயந்திரம் வரவழைப்பது..இதில் ஏதாவது அரசியல் தலையீடோ தாமதமோ நடந்தது? இல்லையே..அவர்களும் மனிதர்கள் அவர்களுக்கும் பண்டிகை..அவர்கள் தங்கள் குடும்பத்தையெல்லாம் விட்டுவிட்டு இங்கே முகாம்மிட்டதே குழந்தையை மீட்க.அந்த புரிதல் இல்லாமல் அவர்களை கொச்சை படுத்துவது? குழந்தையை உயிரோடு மீட்டாள் சந்தோசம் ஒருவேளை முடியாவிட்டால் அவர்களுக்கு அது பெரும் இழுக்கு அவமானம் ,,மீரா மாதிரி ஆளுங்க எல்லாம் துப்பும்,, இது தெரியாமலா அவர்கள் அந்த காரியத்தில் இறங்கினர்? ..இதில் முதல்வர் வீட்டு குழந்தை என்றால் இப்படி நடந்திருக்குமா எனும் கேள்வி எவ்வளவு அபத்தமானது? ஒரு புரிதல் இல்லா கருத்து..நாறிப்போன வாயால் எப்பொழுதும் அடுத்தவரை திட்டிக்கொண்டே இருக்கும் ஒரே எதிர்மறை எண்ணம் கொண்ட ஜந்துவிடம் வேறென்ன கருத்து எதிர்பாக்க முடியும்?
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
29 அக், 2019 - 17:26 Report Abuse
Sathyanarayanan Bhimarao கடவுளே அந்தக் பாலகனின் உயிர் பறி போனதற்கு முக்கிய காரணம் அந்தக் குழியை வெட்டி விட்டு மூடாமல் போனவர்கள்தான். அவரைக் கண்டிப்பதற்கு யாரும் முன் வராதது அதிசயம்தான்.
Rate this:
29 அக், 2019 - 16:35 Report Abuse
RP Sathish இவளை விமர்சித்தால் அந்த பதிவு இங்கு வராது. அந்த அளவுக்கு கேவலமாக இவளை விமர்சிக்கலாம். தனிமனித ஒழுக்கம் என்பது இவளிடம் உண்டா!!!?😢 என கேட்டு சொல்லங்களேன். (ஒருமையில் பேசியதற்கு மன்னிக்கவம்)
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in