Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மனச்சோர்வு நோயில் இருந்து எப்படி மீண்டேன்: அக்ஷரா கவுடா

19 அக், 2019 - 13:46 IST
எழுத்தின் அளவு:
Akshara-gowda-relief-from-Stress

துப்பாக்கி, போகன் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் அக்ஷரா கவுடா. கன்னட நடிகையான இவர், தமிழ் தவிர வேறு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார். குறிப்பிட்ட சில காலத்துக்கு முன், மனச்சோர்வால் பாதிக்கப்பட்ட இவர், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

இது குறித்து, அவர் கூறியிருப்பதாவது: ‛‛எனக்கு மனசுல ஏதோ ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது. அதனால என்னை நானே தனிமைப்படுத்திகிட்டேன். ஆனா, அதுகூட எனக்கு தெரியலை. ராத்திரி முழுக்க தூக்கம் வராது. மனசுக்குள்ள ஏதோ ஒரு பதற்றம் இருந்துகிட்டே இருக்கும். பதற்றம்தான் என் பிரச்னைக்கான, முதல் அறிகுறி என உணர்ந்தேன். ஆனாலும், எட்டு மாதம் வரை, என்ன பிரச்னைன்னு முழுமையா உணர முடியல.

இதுக்கு மத்தியில, உடல் எடையும் குறைஞ்சிட்டே இருந்தது. அதனால் என் பெற்றோர் ஏதாவது நோயாக இருக்குமோன்னு சந்தேகப்பட்டாங்க; பல மருத்துவர்களை சந்திச்சோம். அப்படி எதுவும் இல்லைன்னு தெரிஞ்சுகிட்டோம். கொஞ்ச நாட்களுக்குப் பிறகுதான், மனம் சார்ந்த பிரச்னைன்னு தெரிஞ்சது. அதுக்கு சிகிச்சை எடுக்க ஆரம்பிச்சேன்.

சிகிச்சை எடுத்துக்கிட்டு இருக்கும்போது, சினிமாவில் நடிப்பதை முழுமையா தவிர்த்துட்டேன். காரணம், ஒரு டேக் எடுக்க வேண்டிய இடத்துல, பல டேக் எடுக்க வேண்டிய நிலை வரலாம். என்னால எல்லோருக்கும் பிரச்னை வரும். அதனால தவிர்த்துட்டேன். மனச்சோர்வு அதிகமாக இருக்கும்போது, தற்கொலை எண்ணம் தலைத்தூக்கும் என்பார்கள். அது எனக்கும் இருந்தது. மனச்சோர்வு நோய், ஒரே நாளில் ஏற்படும் பிரச்னையல்ல. என்னை பத்திரமா என் பெற்றோர்தான் பார்த்துகிட்டாங்க. முழுமையா எனக்கு ஆதரவா இருந்ததால, இப்ப மனச்சோர்வில் இருந்து மீண்டு விட்டேன்.

இவ்வாறு அக்ஷரா கவுடா கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அந்த பதில் பிடித்தது: நித்யா மேனன்அந்த பதில் பிடித்தது: நித்யா மேனன் யோகன்: அத்தியாயம் ஒன்று - விஜய் கதையில் வருண் யோகன்: அத்தியாயம் ஒன்று - விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
21 அக், 2019 - 16:31 Report Abuse
A.George Alphonse உடை அழகை பார்த்தாலே தெரியுது மன அழுத்தம் எதுக்கு வந்ததுன்னு.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in