Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் சரவணனை சந்தித்த கவின், சாண்டி

16 அக், 2019 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Kavin---Sandy-met-Saravanan

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் மீண்டும் நடிகர் சரவணனை நேரில் சென்று சந்தித்துள்ளனர் கவினும், சாண்டியும். பிக்பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் சரவணன், கவின் மற்றும் சாண்டி அணி தான். எப்போதும் சித்தப்பு, சித்தப்பு என்றபடியே கவினும், சாண்டியும் சரவணனின் பின்னாடியே சுற்றிக் கொண்டு இருந்தனர்.

சரவணனும் பல விசயங்களில் அவர்களுக்கு சரியான அறிவுரையை தந்து வழிநடத்தினார். அதோடு, பிக்பாஸ் வீட்டில் பெரிதாக சர்ச்சை எதிலும் சிக்காமல், தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தார். இதனாலேயே, பிக்பாஸ் வீட்டிலும் மக்கள் மத்தியிலும் அவருக்கு நல்ல பெயர் உண்டானது.

ஆனால், ஒரு நாள் கமலிடம் பேசும் போது சிறுவயதில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் சென்றதாகக் கூறிய விவகாரத்தில் அதிரடியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன். இதனால் கவினும், சாண்டியும் தான் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்ட நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் சாண்டியும், கவினும் சரவணனை அவரது வீட்டிற்கே சென்று நேரில் சந்தித்துள்ளனர். அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கத்தில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பிகில் படம் என்னைக்கு ரிலீஸ் தெரியுமா?பிகில் படம் என்னைக்கு ரிலீஸ் ... 'பிகில்' டிரைலருக்குப் போட்டியாக மாறிய 'ஜீரோ' டிரைலர் 'பிகில்' டிரைலருக்குப் போட்டியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
16 அக், 2019 - 16:57 Report Abuse
Vasudevan Srinivasan சரவணன் அவர்களுக்கு என்ன ஆனது ஏன் இப்படி மெலிந்துபோய் நோய்வாய்பட்டவர் போல இருக்கிறார்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Seeru
    • சீறு
    • நடிகர் : ஜீவா
    • நடிகை : ரியா சுமன்
    • இயக்குனர் :ரத்ன சிவா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Dagalti
    • டகால்டி
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : ரித்திகா சென்
    • இயக்குனர் :விஜய் ஆனந்த்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in