Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாண்டியை நேரில் வாழ்த்திய சிம்பு

09 அக், 2019 - 11:47 IST
எழுத்தின் அளவு:
Simbu-wishes-Sandy

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாண்டியை, நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.

கடந்த ஞாயிறன்று பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி முடிந்து விட்டது. இந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றுள்ளார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார்.

சினிமாவில் நடன இயக்குநராகப் பணி புரிந்த சாண்டிக்கு ஏற்கனவே ரசிகர்கள் ஏராளம். திரையுலகிலும் இவருக்கு நண்பர்கள் உள்ளனர். குறிப்பாக சிம்பு அவருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். எனவே தான் இந்த சீசனில் மஹத் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்ற போது, சிம்பு மிகவும் விசாரித்ததாக சாண்டியிடம் கூறினார்.

இந்நிலையில் தற்போது சாண்டியை நேரில் வாழ்த்தியுள்ளார் சிம்பு. இந்த சந்திப்பு சிம்பு வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது சாண்டியுடன் தர்ஷன் மற்றும் மஹத் இருந்துள்ளனர்.

சாண்டியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவரைத் தூக்கி சுற்றுகிறார் சிம்பு. பிறகு தர்ஷனிடம் கை குலுக்குகிறார். சாண்டிக்கு ஏதோ பரிசும் தருகிறார். இந்த வீடியோவை சிம்புவே தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இணையத்தில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தமிழில் வாய்ப்பு தேடும் எவ்லின் சர்மாதமிழில் வாய்ப்பு தேடும் எவ்லின் ... நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன்: ஸ்ருதிஹாசன் நல்ல காதலுக்காக காத்திருக்கிறேன்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
12 அக், 2019 - 16:03 Report Abuse
Vasudevan Srinivasan அழகான முகத்தை ஏன் இப்படி அலங்கோலமாக மாற்றிக்கொண்டுள்ளார் சிம்பு அவர்கள்..?
Rate this:
எதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா
20 அக், 2019 - 20:27Report Abuse
எதிர்க்குரல் அழகு நிரந்தரமானது அல்ல...மேலும் அது பார்ப்பவர் கண்களை பொறுத்து மாறு பட கூடியது. அழகு என்பது உண்மையில் ஒழுக்கம் மற்றும் சேவை மனப்பான்மை மூலம் அறியப்பட வேண்டும். அது சரி, முகம் நன்றாக இருக்கிறதென்றால் முதலமைச்சர் பதவியை கூட தந்துவிட கூடிய அறிவாளிகள் வாழும் தேசமல்லவா இது??...
Rate this:
s.rajagopalan - chennai ,இந்தியா
10 அக், 2019 - 13:19 Report Abuse
s.rajagopalan அந்த தாடிக்காரர் சிம்புவா ? எவ்ளோ அழ ...க...க...கா கீறாரு ?
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
09 அக், 2019 - 16:40 Report Abuse
Endrum Indian நேத்திலிருந்து பிக் பாஸ் வரவில்லையே விஜய் டீவியில்??? என்னாச்சி??
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Irandam Ulagaporin Kadaisi Gundu
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in