Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பொன்னியின் செல்வன்: சத்யராஜ் விலகல்

04 அக், 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Sathyaraj-out-from-Ponniyin-Selvan

இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படைப்பான ‛பொன்னியின் செல்வன்', 5 மொழிகளில் பிரம்மாண்டமாய் தயாராகிறது. தென்னிந்திய நடிகர்களும், பாலிவுட் நடிகர்களும் நடிக்க இருக்கிறார்கள். இதற்கான முதல்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம், சுந்தர சோழன் கேரக்டரில் அமிதாப்பச்சன், வந்திய தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம்ரவி, நந்தினியாக ஐஸ்வர்யாராய், உள்பட பலர் முடிவு செய்யப்பட்டு வருகிறார்கள். இதில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க அனுஷ்காவை அணுகியபோது, சம்பளம் விவகாரம் உள்ளிட்ட சில காரணங்களை சொல்லி நடிக்க மறுத்துவிட்டார்.

தற்போது பழுவேட்டையர் கேரக்டரில் நடிப்பதாக இருந்த சத்யராஜூம் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 6 மாத கால்ஷீட் தர வேண்டும். படம் முடியும் வரை வேறு படத்தில் நடிக்க கூடாது என்ற நிபந்தனைளை ஏற்கத் தயங்கிய சத்யராஜ், படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் சத்யராஜுக்கு பதிலாக தமிழ், தெலுங்கில் சீனியர் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க படக்குழு தீவிரமாக யோசித்து வருகிறது. பாகுபலி படத்தில் கட்டப்பாவாக சத்யராஜ் பிரமாதமான நடிப்பை கொடுத்த சத்யராஜ் தான், பழுவேட்டையர் கேரக்டருக்கு பொருத்தமானவர் என்பதால் அவரை சமாதானப்படுத்தி சில நிபந்தனைகளை விட்டுக் கொடுத்து அவரையே நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சிக்கலில் ஹீரோ தலைப்பு: சிவகார்த்திகேயன் படத் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ்சிக்கலில் ஹீரோ தலைப்பு: ... காந்திக்கு பிடித்த பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி காந்திக்கு பிடித்த பாடலை பாடிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

ravichandran - Hosur,இந்தியா
07 அக், 2019 - 10:12 Report Abuse
ravichandran அருள்மொழி வர்மனின் வயது 19 என்றுதான் கல்கி குறிப்பிடுகிறார்..
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
05 அக், 2019 - 16:04 Report Abuse
Jaya Ram சத்யராஜ் உண்மையான தமிழனாக இருந்தால் அந்த பழுவேட்டரையரின் கதாபாத்திரத்தின் தன்மை கருதி அதில் நடிக்கவேண்டும் ஏனென்றால் எதிர்காலத்தில் சினிமா வரலாற்றில் சிறப்பாக பேசப்படும் கதாபாத்திரங்களுல் அதுவும் ஒன்று
Rate this:
05 அக், 2019 - 11:08 Report Abuse
Saravanan Dubai மணிரத்னம் வெள்ளை தோல் நடிகர்கள் தான் சிறந்தவர்கள் என்று நினைப்பவர். மாதவன், அரவிந்த்சாமி என்று நிறத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் தரும் நபர். தமிழர் காவியத்திற்கு வெள்ளை முலாம் பூசி வரலாற்றை மாற்ற நினைக்கிறார். வாழ்த்துக்கள்.
Rate this:
ரத்தினம் - Muscat,ஓமன்
05 அக், 2019 - 09:36 Report Abuse
ரத்தினம் ஜெயம் ரவி நல்ல தேர்வு.
Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
05 அக், 2019 - 08:48 Report Abuse
vbs manian பெரியவர் ப. ரஞ்சித்திடம் ஒரு வார்த்தை கேட்டுவிடுவது நல்லது.
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in