Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தி கற்பதில் தவறில்லை: லட்சுமி ராமகிருஷ்ணன்

21 செப், 2019 - 15:58 IST
எழுத்தின் அளவு:
Learning-hindi-is-not-wrong-say-Lakshmi-Ramakrishnan

இந்தி மொழி பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதற்கு, இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியது. இந்நிலையில் இந்தி கற்பது தவறில்லை என்கிறார் நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன்.

டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது: இந்தியா முழுவதும் சென்று, நம்முடைய இளைஞர்கள் பணியாற்ற வேண்டும் என்றால், அதற்கு இணைப்பு மொழியாக இந்தி இருக்கும். அப்படிப்பட்ட மொழியை அவர்கள் கற்க வேண்டும் என்பதில் என்ன தவறு இருக்கப் போகிறது? அதே நேரம், வட இந்திய இளைஞர்கள், மூன்றாவது மொழியாக தமிழைக் கற்கலாம் என வலியுறுத்தலாம். அப்படி அவர்கள் தமிழையும், நாம் இந்தியையும் கற்கும்போது, அது ஒரு கலாசார பரிமாற்றமாகத்தான் இருக்கும்.

இந்தி மொழிக்கு எதிராக போராடுபவர்கள் குழந்தைகள் தமிழ் மட்டும் தான் பேசுகிறார்களா? புதிய மொழியால் தாய் மொழியின் மீதான பற்று விலகிவிடுமா? தமிழ் மொழியை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்துக்கு முற்றிலும் மாறாக இயங்குகிறோம். மது பிள்ளைகளுக்குத் தேவை சிறந்த கல்வி, முழுமையான பாடத்திட்டம், நம்பிக்கை போன்றவை தான். இந்தியை எதிர்ப்பதை விட்டு விட்டு, ஆரோக்கியமாக சிந்திக்கப் பழக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
திருநங்கைகள் மதிப்பு கூடும்: சசிகுமார்திருநங்கைகள் மதிப்பு கூடும்: ... காப்பானுக்கு கலவையான விமர்சனங்கள் காப்பானுக்கு கலவையான விமர்சனங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Believe in one and only God - chennai,இந்தியா
21 செப், 2019 - 22:44 Report Abuse
Believe in one and only God நம் இந்தியர்களுக்கு அதிகம் வேலை தருவது அரபு நாட்டில் தான். ஹிந்தியை படிப்பதை விட, அரபு மொழியை படிப்பது வேலைக்கு உத்தரவாதம் உடையது. ஒரு கணக்கெடுத்து பாருங்கள். தமிழர்கள் வாடா நாட்டில் அதிகம் வேலை செய்கிறார்களா, அல்லது அரபு நாட்டில் அதிகம் பேர் வேலை செய்கிறார்களா என்று. கண்டிப்பாக அரபு நாடு தான் நம் நாடு இளைஞர்களுக்கு வேலை கொடுக்கிறது. அதனால் அரபு மொழியை படிக்க சொல்லுங்கள்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21 செப், 2019 - 21:52 Report Abuse
Mirthika Sathiamoorthi படுச்சவனிலிருந்து படிக்காதவன் வரைக்கும் திரும்ப திரும்ப புரியாமலே உளறானுங்க...இந்தம்மாவும் அந்த லிஸ்டில் ஒரு ஆளு...யாருங்க தமிழ்நாட்டில் ஹிந்தி கத்துக்க கையபுடிச்சு தடுத்த..? CBSE ஹிந்தி பிரச்சார சபா இங்கெல்லாம் ஹிந்தி படிக்கறவன் ஒளிஞ்சுக்கிட்டு திருட்டுத்தனமா பயந்துகிட்டு படிக்கிறான் பாருங்க...ஹிந்தி வேணும்ன்னு சொல்றவன் புள்ளையெல்லாம் தமிழ்மட்டும் பேசுதா? கேனத்தனமான கருத்து... இங்க பிரச்னை ஹிந்தி படிப்பதல்ல...ஹிந்தியை பாடமா எடுத்து பரீட்சை எழுதி கட்டாயம் பாசாகணும்…..குழந்தைகள் பாடங்களை எளிமையாக்குங்கன்னு கருத்து சொல்லிட்டு இருக்கறப்ப...இன்னொரு மொழியை புடுச்சு பாசகனும் சொல்றது...குழந்தைகளின் மீதான வன்முறையா இல்ல? இதைத்தான் திணிப்புன்னு சொல்றோம்...இன்றய நிலையில் ஹிந்தி கத்துக்கறவன் எத்தனை பேர் பரீட்சை எழுதுறேன்...தேர்வாகாவிட்டால் வாழ்க்கையே போச்சுங்கிறான்…? ஹிந்தியை பாடமாக வைத்தால் தேர்வாகவில்லையென்றால் வாழ்க்கை போச்சு...இதைத்தான் திணிப்புன்னு சொல்றோம். ஆங்கிலம் உயர்கல்விக்கு அவசியம், ஹிந்தி அரசு வேலைக்கு அவசியம்..தமிழ் வேணும்ன்னு முடிவு பண்ணிடுவாங்கன்னு பயந்து, தாய்மொழியை காப்பாத்த எதிர்க்கிறோம்.. ..ஹிந்தி எதிர்ப்புக்கும், ஹிந்தி திணிப்பு எதிர்ப்புக்கும் வித்தியாசம் இருக்கு மேடம்..
Rate this:
sudhan - chennai,இந்தியா
21 செப், 2019 - 17:20 Report Abuse
sudhan வட நாட்டவர்கள் மூன்றாவது மொழியாக தமிழ் ஐ கற்கலாம் , ( தேவை பட்டால் ), ஆனால் தமிழர்கள் கண்டிப்பாக ஹிந்தி ஐ கற்க வேண்டும் .ஏன் இந்த அடக்கு முறை என்பதுதான் எல்லாரின் கேள்வியும் ? வேலை தேடி போகும் நேரத்தில் நாங்கள் கற்றுக்கொள்கிறோம் , எப்படியும் எஙகளுக்கு அரசாஙகம் வேலை தரப்போவதில்லை . வேலை எஙகளுக்கு மலேசியாவில் கிடைத்தால் மலாய் கற்று கொள்வோம் , அப்போது ஹிந்தி தேவை இல்லை அல்லவா ????
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in