Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ராஜமவுலியின் உதவியை நாடிய சிரஞ்சீவி ?

12 செப், 2019 - 14:09 IST
எழுத்தின் அளவு:
did-chiranjeevi-approach-rajamouli-for-help

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமான பட்ஜெட்டில் வரலாற்றுப் படமாக உருவாகி வருகிறது நரசிம்ம ரெட்டி. அமிதாப், விஜய்சேதுபதி, சுதீப் என ஒவ்வொரு மொழி பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்கிவருகிறார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து அக்டோபர் மாதம் ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக வெளியான சாஹோ படத்தின் ரிசல்ட் சிரஞ்சீவியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


குறிப்பாக ரிலீசுக்கு முன்பு 'சாஹோ' படத்தை பார்த்த இயக்குநர் ராஜமவுலி படத்தின் நீளத்தை குறைக்கும்படி ஆலோசனைகள் சொன்னதாகவும் ஆனால் அதை படத்தின் இயக்குனர் சுஜித் ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் சைரா படத்தை இயக்கியுள்ள சுரேந்தர் ரெட்டி என்னதான் கமர்ஷியல் பட இயக்குனர் என்றாலும் வரலாற்றுப் படம் என்பது அவருக்கு புதிதுதான்..


அதனால் ஏற்கனவே வரலாற்று படத்தை இயக்கிய அனுபவம் மிக்க ராஜமவுலியிடம் இந்தப்படத்தை திரையிட்டுக் காட்டி அவரது வழிகாட்டுதலின்படி படத்தை ட்ரிம் செய்வதற்கு சிரஞ்சீவியும் படத்தின் தயாரிப்பாளரான அவரது மகன் ராம்சரணும் முடிவுசெய்து ராஜமவுலியை அணுகியுள்ளார்களாம். எந்த வகையிலும் சைரா படம் ரசிகர்களை விட்டு விலகி போய்விடக்கூடாது என்பதிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றே ஆக வேண்டும் என்பதிலும் தந்தை-மகன் இருவரும் உறுதியாக இருக்கிறார்களாம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் மஞ்சு வாரியர்மீண்டும் ரோஷன் ஆண்ட்ரூஸ் டைரக்சனில் ... 'சை ரா' விழாவில் ராஜமௌலி 'சை ரா' விழாவில் ராஜமௌலி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in