Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சபாஷ் நாயுடுவால் தலைவனுக்கு வந்த சங்கடம்

11 செப், 2019 - 09:40 IST
எழுத்தின் அளவு:
Trouble-for-kamal-haasans-thalaivan-irukkindran

தமிழ் சினிமாவின் நிலைமை ஒரு பக்கம் சிறப்பாக இருப்பது போல சிலர் காட்ட முயற்சித்தாலும் நிலைமை என்னமோ தவிப்பில் தான் இருக்கிறது. படம் தயாரிக்க வரும் பெரிய நிறுவனங்கள் கூட தடுமாற்றத்துடனேயே தங்கள் தயாரிப்பைத் தொடர்ந்து வருகின்றன.

லைகா நிறுவனம் தயாரிக்க கமல்ஹாசன் நடிக்க ஆரம்பமான 'சபாஷ் நாயுடு' படம் அமெரிக்காவில் சில வாரங்கள் படப்பிடிப்பு நடைபெற்று அப்படியே நிறுத்தப்பட்டுவிட்டது. அதன் பின் 'இந்தியன் 2' படம் ஆரம்பமாகி அதுவும் நிறுத்தப்பட்டு பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

அவற்றோடு அதே நிறுவனத்திற்காக 'தலைவன் இருக்கின்றான்' என்ற படத்தையும் அறிவித்தார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசை என்று கமலும் புகைப்படத்துடன் பதிவிட்டார். ஆனாலும், 'சபாஷ் நாயுடு, இந்தியன் 2' ஆகியவற்றை பிரச்சினைகளை மனதில் வைத்து 'தலைவன் இருக்கின்றான்' படத்தை கைவிடும் முடிவுக்கு வந்தார்களாம்.

ஒரே சமயத்தில் கமல்ஹாசனுடன் இத்தனை படத்தில் சிக்க வேண்டாம் என்பது அவர்களது எண்ணமாக இருந்தது என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள். இருப்பினும் கமல்ஹாசன் உறுதி கொடுத்த நிலையில்தான் 'இந்தியன் 2' மீண்டும் ஆரம்பம், தொடர்ந்து 'தலைவன் இருக்கின்றான்' படமும் நடக்கும் என்கிறார்கள். இது இப்போதைய நிலைமைதான், நாளை எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சாஹோ - வசூல் ஓஹோ, லாபம் அச்சச்சோ...சாஹோ - வசூல் ஓஹோ, லாபம் அச்சச்சோ... முத்தையா முரளிதரன் பயோபிக் - என்ன செய்யப் போகிறார் விஜய் சேதுபதி ? முத்தையா முரளிதரன் பயோபிக் - என்ன ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
11 செப், 2019 - 17:33 Report Abuse
Vasudevan Srinivasan சபாஷ் நாயுடு படம் ஏன் தடைபட்டுள்ளது அதுபற்றி எந்த அறிவிப்பும் இல்லையே..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in