Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

செப்., 6ல் சீனாவில் வெளியாகும் 2.0: எமி மகிழ்ச்சி

27 ஆக, 2019 - 12:25 IST
எழுத்தின் அளவு:
2point0-china-release-:-Amy-Jackson-happy

நடிகர் ரஜினி நடிப்பிலும், இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான படம் 2.0. மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில், லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தை, உலகம் முழுவதும், ஒரே நாளில் வெளியிட்டனர். சுமார் 10 ஆயிரத்து 500 திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், 3டி திரைகளில் வசூலை குவித்தது. அதேசமயம், சில ஏரியாக்களில் வசூல் இல்லை.

இதையடுத்து, இந்தப் படத்தை சீனாவில் வெளியிட, சீன மொழியில் மொழி மாற்றம் செய்தனர். படத்துக்கான எல்லா வேலைகளும் முடிந்து, கடந்த ஜூலை 12ல், படம் சீனாவில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்டப்படி, படம் ரிலீஸ் ஆகவில்லை.

இந்நிலையில், இந்தப் படம் செப்., 6ல் சீனா முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என தெரிகிறது. இந்த செய்தியை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி உடன் நடிகை எமி ஜாக்சன் வெளியிட்டிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'சாஹோ' பட்ஜெட் 350 கோடி?'சாஹோ' பட்ஜெட் 350 கோடி? ‛மிஸ் இந்தியா' கீர்த்தி சுரேஷ் ‛மிஸ் இந்தியா' கீர்த்தி சுரேஷ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

JMK - Madurai,இந்தியா
27 ஆக, 2019 - 14:31 Report Abuse
JMK 800 கோடி வசூல் செய்த படம் சில இடங்களில் வசூல் செய்ய வில்லையா ? அது எந்த இடம் சொல்ல முடியுமா ?
Rate this:
Loganathan Balakrishnan - Salem,இந்தியா
27 ஆக, 2019 - 15:12Report Abuse
Loganathan Balakrishnanஇன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் இந்த படம் தோல்வி. தமிழில் இது போல் படம் எடுக்க மாட்டார்கள் 2.௦(முக்கியமாக ரஜினி படம்)மாதிரி வித்யாசமான படம் வந்தால் சப்போர்ட் பண்ண மாட்டார்கள்...
Rate this:
JMK - Madurai,இந்தியா
28 ஆக, 2019 - 13:08Report Abuse
JMKவிஜய் / அஜித் படைகள் இதுவரை 200 கோடி தாண்டியதில்லை? இருந்தாலும் அவர்கள் படங்களை பிளாக் பஸ்டர் என்று தலையில் தூக்கி வைத்து கொடடுவர்? ஆனால் இந்த படம் 800 கோடி தண்டியாச்சு ஆனால் 2.0 தோல்வி படம்? என்னையா சொல்ல வரீங்க ?...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in