Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கஸ்தூரி

26 ஆக, 2019 - 13:04 IST
எழுத்தின் அளவு:
Kasthuri-out-from-biggboss

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நடிகை கஸ்தூரி வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளராக நுழைந்தவர் கஸ்தூரி. டுவிட்டரில் பரபரப்பாக இயங்கி வந்த கஸ்தூரி, பல சர்ச்சைகளுக்கு வித்திட்டவர். எனவே வெளியே இருந்தது போல் பிக்பாஸ் வீட்டிலும் இருப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு தகுந்தாற்போல் வீட்டிற்குள் நுழைந்த முதல் நாளே தனக்கு தரப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஹவுஸ்மேட்ஸை தெறிக்கவிட்டார். ஆனால் சர்க்கரை பொங்கல் டாஸ்க்கில் சோதப்பியதில் இருந்து காமெடி பீஸாக மாறிப்போனார் கஸ்தூரி. சாண்டி, கவின் உள்ளிட்ட பாய்ஸ் கேங் அவருக்கு காக்கா என பட்டப்பெயர் வைத்து கேலி செய்தது.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து நடிகை கஸ்தூரி முறைப்படி வெளியேற்றப்பட்டுள்ளார். எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்பட்ட அவர், குறைந்த வாக்குகளே பெற்றார். எனவே அவரை வெளியேற்றுவதாக கமல் நேற்று அறிவித்தார். பிக்பாஸ் வீட்டின் ரகசிய அறைக்கு போக விருப்பமா என கமல் கேட்டதற்கு, குழந்தைகளை காரணம் காட்டி மறுத்துவிட்டார் கஸ்தூரி.

17வது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கஸ்தூரி, 17 நாட்களில் தனது சொந்த வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தீபாவளி போட்டியில் 3 படங்கள் ?தீபாவளி போட்டியில் 3 படங்கள் ? நினைத்ததை சாதித்த கமல் நினைத்ததை சாதித்த கமல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

LAX - Trichy,இந்தியா
28 ஆக, 2019 - 02:07 Report Abuse
LAX கோமணம் மட்டுமே கட்டுபவர்கள் ஊரில் வேட்டி கட்டுபவன்(ள்) முட்டாள்.. BB போன்ற 'கலீஜான' வீடுகளுக்கு கஸ்தூரி துளியும் பொருத்தமற்றவர்.. So.... odd one out.. வாழ்த்துக்கள் கஸ்தூரி.. for a Guest Appearance in 'that' House.. its enough..
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27 ஆக, 2019 - 11:50 Report Abuse
skv srinivasankrishnaveni எண்டிம்மா உனக்கு நோயநோய்னு ஏதாச்சும் சொல்லினேனே கிடைக்கவேண்டும் அதெல்லாம் அந்த உருட்டுலே நடக்காதே அதான் வந்துட்டியா வம்போதாரி (மீல்ஸ் வம்புக்கே அலையும் லேடி)
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
26 ஆக, 2019 - 17:23 Report Abuse
Vasudevan Srinivasan ஒரு எழவும் புரியாத (புரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை) நிகழ்ச்சி இது... தேவை இல்லாமல் பரபரப்பை உண்டாக்குகிறார்கள் மீடியாக்காரர்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in