Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பிகில்' கதை பஞ்சாயத்து தொடர்கிறது

25 ஆக, 2019 - 15:46 IST
எழுத்தின் அளவு:

அட்லீ இயக்கத்தில், விஜய், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் 'பிகில்'. அப்படத்தின் கதை தன்னுடையது என கே.பி. செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதோடு படத்தின் படப்பிடிப்பு, திரையிடலுக்கும் தடை கேட்டிருந்தார்.


அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று மீடியாக்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.ஆனால், அடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக கே.பி. செல்வா அவருடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.


“அஞ்சு மாசமா சிட்டி சிவில் கோர்ட்ல கேஸ் நடந்துட்டு இருக்கு, நெறய வாக்குவாதம் அதுல பிகில் கதை வேற என்னோட கதை வேறன்னு அவங்க சொல்லல, என்ன மீட் பண்ணலன்னு அவங்க சொல்லல !! அவங்க சொன்னதெல்லாம் 'காப்பிரைட்' கேஸ் ஐகோர்ட்ல தான் நடக்கணும், அதனால இந்த கேஸ சிட்டி சிவில் கோர்ட்ல டிஸ்மிஸ் பண்ணுங்க" அப்டின்னுதான் மட்டும்தான் கடந்த அஞ்சு மாசமா அவங்க வக்கீல் வாதாடுனாங்க, செரி நேரமும் ரொம்ப போயிட்டே இருக்கு , அவங்களும் இவ்ளோ பேசுறாங்கன்னு நான் தான் நாமளும் ஐகோர்ட்ல கேஸ பாத்துக்கலாம்ன்னு, சிட்டி சிவில் கோர்ட்ல திரும்ப பெறும் மனு தாக்கல் பண்ண !! அதுக்கு நீதிபதி அத ஏற்றுக்கொண்டு பண்ணி கேஸ டிஸ்மிஸ் பண்ணாங்க !!


இன்னும் ஒரு வாரத்துல ஐகோர்ட்ல கேஸ் தாக்கல் பண்ண போற, ஆனா இதுக்கு நடுவுல ஏஜிஎஸ் தரப்பு பிரஸ் ரிலீஸ் ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க , அதுல உண்மையாவே எனக்கு என்ன புரியலன்னா நான் திரும்ப பெறும் மனு பண்ணி கேஸ் டிஸ்மிஸ் ஆனத, அவங்க என்னமோ வாதாடி ஜெயிச்சி கோர்ட்ல டிஸ்மிஸ் வாங்கினா மாதிரி எதுக்கு சொல்றாங்க !! நீங்க உண்மையா ஜெயிச்சீங்களா இல்லையான்னு உங்க மனசாட்சிக்கு தெரியும் !! நான் கொஞ்சம் நாளா இத பத்தி பேச வேணா அப்டி பேசினா கதையை வெளிய சொல்லவேண்டிய சூழ்நிலை வரும்ன்னு அமைதியா இருந்த, இனிமேலும் அமைதியாதான் இருப்ப, ஆனா இப்ப நீங்கதான் என்ன வெச்சி சீப் பப்லிசிட்டி பண்ணிட்டு இருக்கீங்கன்றத மறந்துடாதீங்க !!,” எனப் பதிவிட்டுள்ளார்.


அவருடைய பதிவின்படி அடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'கோமாளி' படத்தில் இடம் பெற்ற 'சுட்ட' காட்சி'கோமாளி' படத்தில் இடம் பெற்ற ... காப்பான் பட வெளியீட்டில் சிக்கல்? காப்பான் பட வெளியீட்டில் சிக்கல்?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கிறுக்குப்பய அட்லி சுட்றது ஊருக்கே தெரியும் ... அதுக்கு உயர்நீதிமன்றம் எதுக்கு ....இங்கே பல பேரோட பொழப்பே ஹாலிவுட்டை நம்பி இருக்கு ...தேரை இழுத்து தெருவுல விட்றாதீங்க அப்ரஸிண்டிகளா ....
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
26 ஆக, 2019 - 03:08 Report Abuse
Allah Daniel 'இனிமே எல்லாரும் காவியை தான் கெட்டிக்கணும்னு' ஒரு வயசான லூசு சொலிச்சே...ஜோசப் விஜய் எதெற்கு பயந்து 'காவியை' கேட்டிட்டு சுத்துது..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in