Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'கோமாளி' படத்தில் இடம் பெற்ற 'சுட்ட' காட்சி

25 ஆக, 2019 - 15:42 IST
எழுத்தின் அளவு:

அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு மற்றும் பலர் நடித்து பத்து நாட்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'கோமாளி'. படம் வெளிவருவதற்கு முன்பே கதைத் திருட்டு சர்ச்சை எழுந்து அதன் பின் பஞ்சாயத்து நடந்து டைட்டிலில் சில வினாடிகள் கார்டு போட்டு பிரச்சினையை முடித்தார்கள்.


படத்தின் கதை திருட்டுக் கதையா இல்லையா என்பது படத்தை இயக்கிய இயக்குனருக்குத்தான் தெரியும். 25 கோடி ரூபாய் வசூலாகிவிட்டதால் அதைப் பற்றி இனி யாரும் பேச மாட்டார்கள். ஆனால், படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சி 'சுட்ட' காட்சி என்பது இப்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


பள்ளியில் படிக்கும் போது யோகி பாபு ஒரு ஜோக் சொல்லுவார். அதை ஜெயம் ரவி சத்தமாகச் சொல்லி அவர் பாராட்டுக்களை வாங்கிவிடுவார். வகுப்பறையே விழுந்து விழுந்து சிரிக்கும். யோகி பாபுவும் அது தன்னுடைய ஜோக் என்று சொல்லிப் பார்ப்பார், அதை யாருமே காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். மேற்படி படத்தில் இடம் பெற்ற இந்தக் காட்சி 'கீ அன்ட் பீலே' என்ற அமெரிக்க தொடரில் இடம் பெற்றுள்ள காட்சியிலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது. 'கோமாளி' படத்திலிருந்து இன்னும் இப்படி எத்தனை காட்சிகளை காப்பி அடித்திருக்கிறார்கள் எனத் தெரியவில்லை.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சாஹோ - டுவிட்டர், இணையதள விமர்சகர்கள் மிரட்டல் ?சாஹோ - டுவிட்டர், இணையதள விமர்சகர்கள் ... 'பிகில்' கதை பஞ்சாயத்து தொடர்கிறது 'பிகில்' கதை பஞ்சாயத்து தொடர்கிறது

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

khalifa -  ( Posted via: Dinamalar Android App )
26 ஆக, 2019 - 10:39 Report Abuse
khalifa jayam ravi tell that joke and yoggi babu will get the credit.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in