Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சேரனின் ஆசை ஒரு வழியாக நிறைவேறியது

24 ஆக, 2019 - 18:38 IST
எழுத்தின் அளவு:
Finally-Cheran-becomes-captain

சென்னை: நீண்ட எதிர்பார்ப்புகளுக்குப் பின் ஒருவழியாக பிக் பாஸ் வீட்டின் தலைவர் ஆகிவிட்டார் சேரன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 60 நாட்களைக் கடந்து விட்டது. நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே எப்படியும் பிக் பாஸ் வீட்டின் தலைவர் ஆகி விட வேண்டும் என்பது தான் சேரனின் மிகப்பெரிய குறிக்கோளாகவே இருந்து வருகிறது. இதற்காகவே வாரம் தோறும் டாஸ்க்கில் சிறந்த போட்டியாளராக தேர்வாக வேண்டும் என போராடிக் கொண்டிருந்தார் சேரன்.

கேப்டன் ஆக வேண்டும் என அவர் ஆசைப்பட்டதற்கு முக்கியமான காரணம் தொடர்ந்து அவரது பெயர் நாமினேஷன் இடம் பிடித்து வருவது தான். பிக்பாஸ் வீட்டில் கேப்டனாக இருப்பவர்களை யாரும் நாமினேட் செய்யமுடியாது. அதனாலேயே அவர் வாரம்தோறும் கேப்டன் ஆக வேண்டும் என முயற்சிகள் செய்தார்.

இந்நிலையில் முதன்முறையாக அவர் பிக்பாஸ் வீட்டின் தலைவராகியிருக்கிறார். இந்த வாரம் நடந்த லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களாக சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வழக்கம் போல் சிறப்பாக விளையாடியவர்கள் தலைவர் பொறுப்புக்கு நாமினேட் செய்யப்பட்டனர்.

அதற்காக நடத்தப்பட்ட போட்டியில், சேரன் வெற்றி பெற்றார். கடந்த முறை மதுமிதா கேப்டன் ஆனார். ஆனால் அந்த வாரமே அவர் தன்னைக் காயப்படுத்திக் கொண்டதால் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

மது தலைவர் போட்டியில் வெற்றி பெற்ற போது, தானே வெற்றி பெற்றதாக பெருமகிழ்ச்சி அடைந்தார் சேரன். தற்போது அவரே தலைவர் ஆகி விட்டார். எனவே அவரது மகிழ்ச்சியைக் கேட்க வேண்டுமா. பூரிப்புடன் தான் அவர் பிக்பாஸ் வீட்டில் வளைய வருகிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 64 அறிவிப்பு: மீண்டும் அனிருத்விஜய் 64 அறிவிப்பு: மீண்டும் அனிருத் அக்டோபர் 4ல் வருகிறார் அசுரன் அக்டோபர் 4ல் வருகிறார் அசுரன்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

25 ஆக, 2019 - 10:59 Report Abuse
mannandhai Today Kasthuri may be eliminated. Cheran will be eliminated next week. Then Vanitha. Then the order may be: Chandy, Losliya, Dharshan, Shreya Mogen and finally Kavin.
Rate this:
சிவ.இளங்கோவன் . - Thanjavur,இந்தியா
26 ஆக, 2019 - 12:10Report Abuse
சிவ.இளங்கோவன் .ஸ்ரேயா எப்போ பிக்பாங்க்ஸுக்கு வந்தார் ஆந்தை ....
Rate this:
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
25 ஆக, 2019 - 05:41 Report Abuse
Allah Daniel தினமும் ரூ 1 லட்சமாம்... தன்மானமாவது.. விளக்கெண்ணையாவது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in