Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தலைகீழாக கவிழ்ந்த நடிகை ஷரத்தா: ஆபத்தில் இருந்து தப்பினார்

20 ஆக, 2019 - 17:26 IST
எழுத்தின் அளவு:
Shraddha-Arya-slips-down-during-dance-show

நடிகரும்; இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யாவுடன் கள்வனின் காதலி படத்தில் இணைந்து நடித்தவர் ஷரத்தா ஆர்யா. அதன் பின், வந்தே மாதரம் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்தார். சில படங்களுக்குப் பின், அவருக்கு தமிழில் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், அவர் கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழிப் படங்களில் நடிக்க வாய்ப்புத் தேடிப் போனார். ஒரு கட்டத்துக்கு மேல், அவருக்கு எங்கும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து, அவர் சின்னத் திரையில் கவனம் செலுத்தத் துவங்கினார். தற்போது அவர், நாச் பலியே என்ற நடன ரியாலிட்டி ஷோவின் 9வது சீசனில் நடித்து வருகிறார். பார்வையாளர்கள் மற்றும் நடுவர்கள் மத்தியில் ஆண் நண்பர் ஆலம் மக்காருடன் அவர் வளைந்து-நெளிந்து ஆடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை ஆண் நண்பர் தலைகீழாக தூக்கி நிறுத்த வேண்டும். இப்படியொரு காட்சியில் இருவரும் ஆடிக் கொண்டிருந்த போது, ஆண் நண்பர் ஆலம், ஷரத்தாவை தலை கீழாகத் தூக்கினார். அப்போது, கை தவறி விட்டது. தலைகீழாக இருந்த ஷரத்தா, அப்படியே தரையில் விழுந்தார். இதனால், அவருக்கு தலையிலும், கழுத்துப் பகுதியில் பலத்த அடிபட்டது.

வலியால் துடித்த ஷரத்தாவை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை அளித்தனர். இதன் பின், ஷரத்தா நார்மல் ஆகி இருக்கிறார்.

இது குறித்து நடிகை ஷரத்தா கூறியதாவது: இது தவறுதலாக நடந்த சம்பவம்தான். ஏற்கனவே பயிற்சியாளர்கள் முன், இப்படியொரு காட்சியில் நடனமாடி நடித்தபோது, எல்லாமே சரியாக இருந்தது. ஆனால், ஷோவில் ஆடும்போது, ஆலனின் கை நழுவி விட்டது. இதனால், நான் தலைகீழாக கீழே விழ வேண்டியதானது. கீழே விழுந்த போது, ரொம்பவே பயந்து விட்டேன். அடியும் பலமாக விழுந்தது. தலையும்; கழுத்தும் ஏதோ ஆகி விட்டது என பயந்தேன். ஆனால், பெரிதாக எதுவும் இல்லை. சிகிச்சைக்குப் பின், இப்போது நார்மலாகி இருக்கிறேன். தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வேன். இறைவன் எனக்கு எப்போது துணை இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சங்கத் தமிழன் படம் ரிலீஸ் எப்போது?சங்கத் தமிழன் படம் ரிலீஸ் எப்போது? ரஜினியுடன் இணையும் மானஸ்வி ரஜினியுடன் இணையும் மானஸ்வி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
22 ஆக, 2019 - 07:56 Report Abuse
vasumathi இப்படி அடிபட்டுத்தான் , பிரண்ட்ஸ் விஜயலக்ஷ்மி கழுத்து வலியால் அவதி படுகிறார். பாவம் இந்த பெண்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in