Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கோமாளி - கதைத் திருட்டு சர்ச்சை, நன்றிக்கு ஒரு கார்டு, நக்கலுக்கு மற்றொரு கார்டு

16 ஆக, 2019 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Comali-:-two-cards-in-title

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் 'கோமாளி'. இப்படத்தின் கதை இயக்குனர், நடிகர் பார்த்திபனின் உதவியாளரான கிருஷ்ணமூர்த்தி என்பவருடையது என அவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார். அதன் பிறகு அது குறித்த விசாரணை நடைபெற்றது. பட வெளிட்டிற்கு சில தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணமூர்த்திக்கு படத்தின் துவக்கத்தில் நன்றி தெரிவித்து ஒரு கார்டு போடப்படும் என பஞ்சாயத்து சுமூகமாக முடிக்கப்பட்டது.

நேற்று படம் வெளிவந்த பின் தியேட்டருக்குச் சென்று படத்தைப் பார்த்தால் அந்த நன்றி கார்டு ஒரு சில வினாடிகள் மட்டுமே வந்து போகிறது. முதல் வரியை படித்து முடிப்பதற்குள்ளாக அந்த கார்டு மறைந்து போகிறது. அதில் தயாரிப்பாளர் பெயரில் ஒரு கார்டும், இயக்குனர் பெயரில் மற்றொரு கார்டும் வருகிறது.

தயாரிப்பாளர் கதைத் திருட்டு சர்ச்சைக்கு ஒரு இணக்கமான நன்றியையும், இயக்குனர் தரப்பில் கதைத் திருட்டுக்கு ஒரு கிண்டலான கார்டையும் பதிவிட்டுள்ளார்கள்.

“ஒருவன் கோமாவிற்கு சென்று நினைவு திரும்புகிறான் என்ற கதைக்கருவை கொண்ட 'ஆனஸ்ட் ராஜ்' (கே.எஸ்.ரவி), 'கில் பில்' (குவன்டின் டரன்டினோ), 'கிக்கின் இட் ஓல்டு ஸ்கூல்' (ஹார்வி கிளேசர்), 'குட்பை லெனின்' (உல்ப்காங் பெக்கர்) போன்ற பல படங்களையும், 'நாம் இருவர் நமக்கு இருவர்' செந்தில், 'பிரண்ட்ஸ்' அரவிந்தன் போன்ற கதாபாத்திரங்களையும் இயக்கிய பல இயக்குனர்கள் உள்ளார்கள். அதனால், இது ஒரு பழைய கதைக்கரு. இதை புரிந்து கொண்டு கதைக்கருவிற்கு உரிமை கொண்டாடாத அந்த பல இயக்குனர்களுக்கு நன்றி. இது ஒரு பழைய கதைக்கரு என்பதால் இந்த கதைக்கருவை யோசித்ததில் எந்தவித பெருமையும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்,” என இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பெயரில் கார்டு வருகிறது.

“ஒருவன் கோமாவிற்கு சென்று நினைவு திரும்புகறான் என்பது எங்களின் கோமாளி படத்தின் கதைக்கரு. இந்த கதைக்கருவும் பா.கிருஷ்ணமூர்த்தியின் 25+25=25 என்ற டைட்டிலிட்ட கதையின் கதைக்கருவும் ஒன்றாக இருக்கிறது என்ற விஷயம் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இருந்து தகவல் பெற்றோம். அவர் எங்கள் படத்தின் கதாசிரியருக்கு மூன்று வருடங்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட கதையை சங்கத்தில் பதிவு செய்து உள்ள காரணத்தால் எழுத்தாளர் பா.கிருஷ்ணமூர்த்தியை கௌரவித்து பாராட்டுகிறோம். மேலும் சங்கம் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்கிறோம். சுமூகமான முறையில் தீர்வு கண்ட சங்கத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றி,” என தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் பெயரில் கார்டு வருகிறது.

ஒரு கார்டில் நன்றியையும், மற்றொரு கார்டில் நக்கலையும் பதிவு செய்துள்ளது 'கோமாளி' குழு....!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நவம்பரில் வருகிறார் சுமோநவம்பரில் வருகிறார் சுமோ தெலுங்கில் இரண்டாவது கதாநாயகனாக அதர்வா தெலுங்கில் இரண்டாவது கதாநாயகனாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in