Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்பில் நடிகர் சுதீப் காயம்

02 ஆக, 2019 - 10:41 IST
எழுத்தின் அளவு:
Actor-Sudeep-injured

கன்னட நடிகர் சுதீப் தற்போது நடித்து வரும் புதிய படம் கோட்டிகோபா 3. மடோனா செபாஸ்டின், ஸ்ரத்தா தாஸ், பாலிவுட் நடிகர் அப்தாப் சிவ்தசனி உள்பட பலர் நடிக்கிறார்கள். இது ஆக்ஷன் த்ரில்லர் படம். சிவகார்த்திக் இயக்குகிறார். படத்தை வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு அதற்காக படப்பிடிப்புகள் தீவிரமாக நடந்து வந்தது.

ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு நடந்து வந்தது. சுதீப் பங்கேற்று நடித்து வந்தார். சண்டை காட்சியொன்றை படமாக்கினர். இதில் சுதீப் நடித்தபோது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு முதுகில் பலத்த அடிபட்டது. சுதீப் வலியால் துடித்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதுகெலும்பு பாதிக்கப்பட்டிருப்பதால் சுதீப் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்த காலகட்டத்தில் படத்தின் மற்ற பணிகள் நடக்கும். திட்டமிட்டபடி படம் கிறிஸ்துமஸ் அன்று வெளிவரும் என்ற தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
அவதூறு பேட்டி : மன்சூரலிகான் மீது புதிய வழக்குஅவதூறு பேட்டி : மன்சூரலிகான் மீது ... விஜய் ஆண்டனி ஜோடி ஆனார் காவ்யா தபார் விஜய் ஆண்டனி ஜோடி ஆனார் காவ்யா தபார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in