Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படவிழாவில் டென்சனான சித்தார்த்

09 ஜூலை, 2019 - 16:04 IST
எழுத்தின் அளவு:
Siddharth-tension-during-promotion

ஹாலிவுட்டில் உருவான, தி லயன் கிங் என்ற படம் இம்மாதம் 19-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. தமிழ்ப் பதிப்பில் சிங்கம், புலி, கரடி, பன்றி உள்ளிட்ட விலங்குகளுக்கு நடிகர்கள் அரவிந்த்சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், ரோபோ சங்கர், சிங்கம்புலி உள்பட பலர் டப்பிங் பேசியுள்ளனர்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அரவிந்த்சாமி, சித்தார்த், ரோபோ சங்கர், சிங் கம்புலி ஆகியோர் தாங்கள் விலங்குகளுக்கு டப்பிங் பேசிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

அப்போது, ஒரு டப்பிங் படத்தின் பிரமோஷனுக்காக அனைவருமே கலந்து கொண்டுள்ளீர்கள். ஆனால் இன்றைக்கு நேரடி தமிழ்ப்படங்களின் பிரமோசன்களிலேயே தமிழ் நடிகர்கள் ஆர்வம் காட்டுவதில்லையே? என்று மீடியாக்கள் சித்தார்த்திடம் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த சித்தார்த், மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது. ஆனால் நான் எனது படங்களின் அனைத்து பிரமோசன்களிலும் தவறாமல் கலந்து கொண்டு வருகிறேன்.

அதனால் தாங்கள் நடிக்கும் படங்களின் பிரமோசன்களில் எந்த நடிகர்கள் கலந்து கொள்ளவில்லையோ அவர்களைப் பார்த்துதான் நீங்கள் இந்த கேள்வியை கேட்க வேண்டும். என்னைப்பார்த்து இந்த கேள்வியைக்கேட்கக்கூடாது என்று சற்று கோபத்துடன் தனது பதிலை சொன்னார் சித்தார்த்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ஓவியாபிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் ... தம்பியுடன் பேசாதது ஏன்..? ; விஜய் தேவரகொண்டா விளக்கம் தம்பியுடன் பேசாதது ஏன்..? ; விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

kurinjikilan - Madurai,இந்தியா
11 ஜூலை, 2019 - 18:15 Report Abuse
kurinjikilan சித்தார்த் வர வர மிகவும் முன்கோபியாக மாறிவிட்டார்..
Rate this:
மாயவரத்தான் - chennai,இந்தியா
10 ஜூலை, 2019 - 15:20 Report Abuse
மாயவரத்தான் ஒரு அசிங்கத்தை போய் சிங்கத்துக்கு குரல் கொடுக்க சொல்லியிருக்காங்க என்ன கொடுமை இது இவன் காசை வாங்கிக்கொண்டு மோடிக்கு எதிராக வார்த்தை வித்தை கட்டியவன்.
Rate this:
TechT - Bangalore,இந்தியா
11 ஜூலை, 2019 - 10:58Report Abuse
TechTஎங்கேயும் மோடி புராணம் எதுக்கு? அப்போ மோடிக்கு எதிரே சொன்ன ...... ஒரு அசிஸிடெண்ட் ஆனா கூட உதவமாட்டீங்களா? மோடிக்கு எதிரானவர்னு ...சவட்டும்னு விட்டுடுவீங்களா?...
Rate this:
maharaja - Kuwait,குவைத்
16 ஜூலை, 2019 - 12:35Report Abuse
maharajaஇது என்னய்யா கூத்தா இருக்கு மோடிக்கு எவனாவது கருத்து சொன்னா, அவன் பேசவேக்கூடாதா? அடேய்களா இதெல்லாம் ரொம்ப ஓவர்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Zombie
    • ஜாம்பி
    • நடிகர் : யோகி பாபு
    • நடிகை : யாஷிகா ஆனந்த்
    • இயக்குனர் :புவன் நல்லான்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in