Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

3 மொழிகளில் தயாராகும் 'ராமாயணா'

08 ஜூலை, 2019 - 13:56 IST
எழுத்தின் அளவு:
Ramayana-to-be-made-in-Three-Language

இந்தியத் திரையுலகில் 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்கள் கொடுத்த வெற்றி, வசூல் ஆகியவற்றைத் தொடர்ந்து ராமாயணம், மகாபாரதம் ஆகிய படங்களைத் தயாரிக்க சில தயாரிப்பாளர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால், அவற்றில் சில அறிவிப்பு அளவிற்குக் கூட வரவில்லை.

இப்போது 'ராமாயணம்' படத்தைத் தயாரிக்கப் போவதாக தெலுங்கு, ஹிந்தித் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். தெலுங்கின் பிரபலமான தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், ஹிந்தித் தயாரிப்பாளர்களான மது மந்தெனா, நமித் மல்கோத்ரா ஆகியோருடன் இணைந்து 'ராமாயணா' படத்தைத் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

ஆமீர்கான் நடித்த 'தங்கல்' படத்தின் இயக்குனர் நிதேஷ் திவாரி, ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படத்தின் இயக்குனர் ரவி உட்யவார் ஆகிய இருவரும் இப்படத்தை இயக்க உள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. இந்திய அளவில் இதற்காக நட்சத்திரத் தேர்வு செய்ய உள்ளார்கள். மூன்று பாகங்களில் தயாராக உள்ள இப்படத்தின் முதல் பாகத்தை 2021ம் ஆண்டில் வெளியிட உள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் இந்த வருடம் ஆரம்பம்தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ... கைவிடப்படும் '2.0' சீனா வெளியீடு கைவிடப்படும் '2.0' சீனா வெளியீடு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

venkatesaperumal - sivakasi,இந்தியா
09 ஜூலை, 2019 - 09:48 Report Abuse
venkatesaperumal மிகவும் வரவேற்கக்கூடிய விஷயம் இதிகாச உண்மைத்தன்மை மாறாது அதுற்கு ஏற்ற கதாபாத்திரங்களில் யாராயினும் நடிக்கவேண்டும்.
Rate this:
Thirumal Kumaresan - singapore,இந்தியா
09 ஜூலை, 2019 - 07:44 Report Abuse
Thirumal Kumaresan எடுக்கிறதெல்லாம் சரிதான் அதன் உண்மை தன்மை மாறாமல் எடுக்க வேண்டும். இல்லாவிடடாள் தேவை இல்லாமல் பிரச்சனை வரும். கவனமாக செய்ய வேண்டும். தவறு செய்யும் நோக்கம் இருந்தால் தேவை இல்லாமல் காசை காரியாக்க வேண்டாம்
Rate this:
Krish - Chennai ,இந்தியா
09 ஜூலை, 2019 - 06:40 Report Abuse
Krish காட்டிற்கு செல்வது வரை முதல் பாகம், சீதா அபஹரணம் வரை ரெண்டு, ராவணன் முடிவு வரை மூன்று என்பது சிறப்பாக அமையும்.
Rate this:
Swaminathan Nath - kumbakonam,இந்தியா
08 ஜூலை, 2019 - 15:04 Report Abuse
Swaminathan Nath valthukal,
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in