Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அல்லு அர்ஜூனை இயக்குகிறார் முருகதாஸ்

05 ஜூலை, 2019 - 15:03 IST
எழுத்தின் அளவு:
AR-Murugadoss-to-make-Allu-Arjun

ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்பார்' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருக்கும் படத்தில் டோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடிக்க இருக்கிறார்.

அல்லு அர்ஜுன் நடித்த தெலுங்கு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வருகின்றன என்றாலும் இதுவரையிலும் அல்லு அர்ஜுன் நேரடி தமிழ்ப்படத்தில் நடித்ததில்லை. சில வருடங்களுக்கு முன் லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு நேரடித் தமிழ் படத்தில் நடிப்பதாக இருந்தது.

இந்த படத்தின் அறிவிப்பு விழா சென்னையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆடம்பரமாக நடைபெற்றது. ஆனால் அந்த அறிவிப்புக்கு பிறகு அந்த படத்தை எடுக்கும் திட்டம் கைவிடப்பட்டது. அதனால் சற்றே வருத்தப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு நேரடி தமிழ்ப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாளாக நிறைவேறாமலே இருந்தது.

அல்லு அர்ஜுனின் அந்த ஆசையை புரிந்து கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ் அவரது ஆசையை நிறைவேற்ற இருக்கிறார். தமிழ், தெலுங்கு என்று இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தை 'கலைப்புலி' எஸ்.தாணு தயாரிக்கிறார். தெலுங்கு வெர்ஷனை முன்னணி தெலுங்குப்பட நிறுவனத்திடம் கைமாற்றிவிட்டுவிட்டார் தாணு.

ஏற்கெனவே தெலுங்கின் முன்னணி ஹீரோக்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு ஆகியோரை வைத்து படங்களை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வரிசையில் இப்போது அல்லு அர்ஜுனும் இடம்பெற உள்ளார். 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முடிவடைந்ததும் அல்லு அர்ஜுன் பட வேலைகளில் ஈடுபட உள்ளாராம் ஏ.ஆர்.முருகதாஸ்!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மாபியா - அடுத்தடுத்து பாகங்கள் உருவாகிறதுமாபியா - அடுத்தடுத்து பாகங்கள் ... கடைசி விவசாயி : வித்தியாசமான லுக்கில் விஜய்சேதுபதி கடைசி விவசாயி : வித்தியாசமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in