Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தங்கல் நாயகிக்கு சித்தார்த் சொன்ன பதில்

04 ஜூலை, 2019 - 16:55 IST
எழுத்தின் அளவு:
Siddharth-replied-to-Zaira-wasims-decision

அமீர்கான் நடிப்பில் கடந்த 2௦16ல் வெளியான படம் தங்கல்'. இந்த படத்தில் அவரின் மகளாக குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்தவர் சைரா வாசிம். அந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் தனது மத நம்பிக்கைகளுக்கு உட்பட்டு சினிமாவில் இருந்து விலகுவதாக முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தார்.

சினிமாவை விட்டு விலகுவதற்கு காரணமாக இவர் தனது மதம் சார்ந்த நம்பிக்கைகளை குறிப்பிட்டுள்ளார் என்பதால் இவரது கருத்தை விமர்சித்தும் பாராட்டியும் கமெண்ட்டுகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் நடிகர் சித்தார்த் சைராவின் விலகல் முடிவு குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.

“இது உங்களுடைய வாழ்க்கை.. நீங்கள் என்ன விரும்புகிறார்களோ அதை செய்யுங்கள்.. உங்களுடைய எதிர்காலத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நமது கலையும், நமது தொழிலும் தான் நமது வாழ்க்கை என நான் நம்புகிறேன். மதத்தை அதிலிருந்து விலக்கி வைக்கவே நாம் போராட வேண்டும். அது இந்த இடத்திற்கு சொந்தமானது அல்ல.. உங்களுடைய மதம் உங்களை இப்படி முடிவெடுக்க தூண்டினால் ஒருவேளை நீங்களும் இந்த இடத்திற்கு சொந்தமானவராக இல்லாமல் கூட இருக்கலாம்” என கூறியுள்ளார் சித்தார்த்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவின் ஓபேபிக்கு சிறப்பு காட்சிசமந்தாவின் ஓபேபிக்கு சிறப்பு காட்சி மோடி, தோனியை விமர்சிக்காதீர்கள் : பிரியதர்ஷன் மோடி, தோனியை விமர்சிக்காதீர்கள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

அக்பர் - Chennai,இந்தியா
07 ஜூலை, 2019 - 14:12 Report Abuse
அக்பர் பர்தா முகமூடி பார்சல்
Rate this:
Rafi - Riyadh,சவுதி அரேபியா
07 ஜூலை, 2019 - 12:58 Report Abuse
Rafi இஸ்லாம் இப்படி தான் வாழ வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது, மனிதர்கள் அதுபோல் வாழ வேண்டுமென்றால் மிக கஷ்டங்களை துயரங்களை தாங்கிக் கொண்டு படைத்த இறைவனை வணங்கும்போது, இந்த மனிதன் எவ்வளவு கஷ்டத்திலும் தவறுகள், குற்றங்கள் செய்யாமல் என்னையே நினைத்து என்னிடமே தன் தேவைகளை கேட்கின்றான் என நினைத்து அவனுக்கு சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கின்றான், இதை திரு குரான் அழகாக விளக்கியுள்ளது. அதை அறிந்துள்ள இஸ்லாமியர்கள் மட்டுமல்ல மனிதர்கள் அனைவரும் சில நேரங்களில் தவறு செய்துவிட்டு, மனசாட்சி சுட்ட அதிலிருந்து விலக முற்படுபவர்களை இறைவன் மன்னிக்கின்றான், இஸ்லாத்தில் ஆடை கட்டுப்பாடு இருக்கு அதை சினிமாவில் நடித்தால் அதிலிருந்து விலகும் சூழ்நிலையில் அப்பெண்ணின் மனசாட்சி சுட்டிக்காட்ட விலகி விட்டார்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in