Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

பா.ஜ.,வில் இணைகிறார் நடிகர் சிரஞ்சீவி?

27 ஜூன், 2019 - 12:51 IST
எழுத்தின் அளவு:
Chiranjeevi-may-joint-in-BJP

ஆந்திராவின் மெகா ஸ்டாராக இருக்கும் நடிகர் சிரஞ்சீவியை பா.ஜ.,வில் இணைக்க, அங்கிருக்கும் பா.ஜ., தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபைத் தேர்தலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி பெரு வெற்றி பெற்று, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.

இதையடுத்து, ஆந்திராவில் பா.ஜ.,வை பெரிய அளவில் வளர்த்தெடுக்கும் முடிவில், அக்கட்சித் தலைவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர். மாற்றுக் கட்சிகளில் இருக்கும் முக்கியத் தலைவர்களை பா.ஜ.,வில் இணைய வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஆந்திராவில் பிரஜா ராஜ்ஜியம் என்ற கட்சியை நிறுவி, அதை, காங்கிரசுடன் இணைத்தவர் நடிகர் சிரஞ்சீவி. காப்பு இன மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள தலைவராக இருக்கும் அவருக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி., பதவியும், கடந்த ஏப்ரலோடு முடிவடைந்து விட்டது. அவர் காங்கிரசில் இருந்தாலும், பெரிய ஈடுபாடு காட்டாமல் இருந்து வருகிறார். சைரா நரசிம்மரெட்டி என்ற வரலாற்று கதையம்சம் கொண்ட படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

அவரை பா.ஜ.,வில் இணைப்பதன் மூலம், ஆந்தைராவில் பா.ஜ.,வை வேகமாக வளர்க்க முடியும் என நினைக்கின்றனர். இதற்காக, நடிகர் சிரஞ்சீவியுடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் அவர் பா.ஜ.,வில் இணைவார் என செய்திகள் வருகின்றன. சைரா நரசிம்ம ரெட்டி படம் ரிலீசாவதற்கு முன்பாகவே, அவர், பா.ஜ.,வில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நிவின்பாலி படத்துக்கு இசையமைக்கும் 96 இசையமைப்பாளர்நிவின்பாலி படத்துக்கு இசையமைக்கும் ... போலீசாரின் ஒற்றுமையை வலியுறுத்துகிறது : மம்முட்டி படத்துக்கு டிஜிபி பாராட்டு போலீசாரின் ஒற்றுமையை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Shivakumar Gk - Bangalore,இந்தியா
29 ஜூன், 2019 - 08:26 Report Abuse
Shivakumar Gk உலகிலே பெரிய அரசியல் இயக்கம் பாஜக, இணைவதால் சிரஞ்ஜீவிக்கு பெருமை
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in