Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட்

19 ஜூன், 2019 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Vijay-63-important-update-Today-evening

'தெறி, மெர்சல்' ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு அட்லீ, விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள விஜய்யின் 63வது படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டுமே பெரும்பாலும் இப்படத்தின் படப்பிடிப்பு இதுவரை நடந்து வந்துள்ளது. விரைவில் வெளியூர்களில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

இப்படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். கதிர், ஜாக்கி ஷெராப், யோகி பாபு, இந்துஜா, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா ஜான் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது மட்டும் தெரியும். இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தப் படம் பற்றிய அப்டேட்டை கடந்த வாரம் ரகுமான் வெளியிட்டார். படத்தின் இரண்டு பாடல்களை முதலில் பார்த்து ரசித்தேன் என்று டுவிட்டர் செய்திருந்தார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்கனா கல்பாத்தி இன்று மாலை 6 மணிக்கு படம் பற்றிய அப்டேட் ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

அது என்னவாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். விஜய்யின் பிறந்த நாள் வரும் 22ம் தேதி வர உள்ளது. அதை முன்னிட்டு படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பை அன்று வெளியிட வாய்ப்பு உள்ளது. விஜய்யின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட விஜய் 63 குழுவின் பிறந்த நாள் பரிசாக அது அமையலாம்.

Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம்ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல் அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
21 ஜூன், 2019 - 17:12 Report Abuse
Vasudevan Srinivasan இங்கே சிலர் தண்ணீரில்லாமல் அவதிப்படும் நேரத்தில் இது ரொம்ப முக்கியம்..? என்று கேட்டிருக்கிறார்கள் முக்கியமில்லையென்றால் ஏன் இந்த செய்தியை படித்தீர்கள்
Rate this:
19 ஜூன், 2019 - 18:49 Report Abuse
விக்கு மண்டையன் குடிக்க தண்ணி இல்லாத நேரத்துல போய்... உயிர எடுகுறிங்க..
Rate this:
deep -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூன், 2019 - 17:37 Report Abuse
deep தண்ணீர் வேண்டும்
Rate this:
pdeep -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜூன், 2019 - 17:36 Report Abuse
pdeep தண்ணி இல்லை
Rate this:
19 ஜூன், 2019 - 17:22 Report Abuse
name, vijay தளபதி
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in