Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒருத்தரை பாலோ பண்றது குத்தமாய்யா...!

12 ஜூன், 2019 - 11:06 IST
எழுத்தின் அளவு:
Rumour-about-Anupama---bumrah

எப்படி எப்படியெல்லாம் யோசித்து தகவலை வெளியிடுவது என்பதற்கு தனி பயிற்சியே பெற வேண்டும் போலிருக்கிறது. அப்படி ஒரு விஷயத்தை யோசித்து வெளியிட்டுள்ளார்கள் சில சமூக வலைதளவாதிகள்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திரப் பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கும், 'கொடி' படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனுக்கும் காதல் என புதிதாக ஆரம்பித்து வைத்துள்ளார்கள். எப்படி இப்படி கண்டுபிடித்தார்கள் என்பதுதான் ஆச்சரியமானத் தகவல்.

ஜஸ்பிரித் பும்ரா அவருடைய டுவிட்டர் கணக்கில் பின்தொடரும் 25 பேரில் அனுபமா பரமேஸ்வரனும் ஒருவர். அவர் அனுபமாவைப் பின் தொடர்வதால் இருவருக்கும் காதல் இருக்கலாம் என பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

சரி அனுபமா அவரை பின் தொடர்கிறாரா என தேடிப் பார்த்தால் பும்ராவை மட்டுமல்ல, தோனி, அபிஷேக் சர்மா ஆகிய கிரிக்கெட் வீரர்களையும் பின் தொடர்கிறார் அனுபமா. ஆனால், பும்ராவுடன் மட்டும் அவரை இணைத்துப் பேசி காதல் வதந்தியை உருவாக்கிவிட்டார்கள். இது எங்கே போய் முடியப் போகிறதோ. ஒரு பிரபலத்தை இன்னொரு பிரபலம் பாலோ பண்றது குத்தமாய்யா....?.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'சீதா' கடத்தல்தான், சிந்துபாத் கதையா ?'சீதா' கடத்தல்தான், சிந்துபாத் ... பாண்டிச்சேரியில் படமாகும் 'சை ரா' பாண்டிச்சேரியில் படமாகும் 'சை ரா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

12 ஜூன், 2019 - 13:15 Report Abuse
கோகுல், மதுரை 10 இலட்சம் பேருக்கும் மேலாக பாஃலோ பண்ணப்படும் பும்ரா, வெறும் 25 பேரை தான் பாஃலோ பண்ணுகிறார். அதில் அனுபமா தவிர மற்ற அனைவரும் விளையாட்டு துறை சம்பந்தப்பட்டவர்கள். இப்ப சொல்லுங்க?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in