Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெயரை மாற்றிய கிச்சா சுதீப்

08 ஜூன், 2019 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Sudeep-changed-his-name

'நான் ஈ' படத்தின் மூலம் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற கிச்சா சுதீப், அடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடித்த கோடி கோபா 2 என்ற கன்னடப்படம் முடிஞ்சா இவனப்புடி என்ற பெயரில் தமிழில் வெளியானது. ஆனால் படம் வெற்றி பெறவில்லை. அதனால் தமிழ்ப்படங்களில் நடிக்கவே ஆர்வம் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் கிச்சா சுதீப் நடிப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் 'பயில்வான்' என்ற படம் உருவாகி வருகிறது. 'ஆர்.ஆர்.ஆர்.மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் சார்பில் ஸ்வப்னா கிருஷ்ணா தயாரிக்கும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்குகிறார்.

குத்துச்சண்டையை மையமாக வைத்து எமோஷன், ஆக்ஷன், நகைச்சுவை கலந்த ஸ்போர்ட்ஸ் படமாக உருவாகி வரும் இப்படத்தில் கிச்சா சுதீப்புடன் அகான்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலிவுட் பிரபலம் சுனில் ஷெட்டி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் கிச்சா சுதீப் குத்துச்சண்டை வீரராக தோற்றமளிக்கும் போஸ்டர்களை அந்தந்த துறையிலுள்ள பிரபலங்கள் சமீபத்தில் வெளியிட்டனர். தமிழ் 'பயில்வான்' போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார். தெலுங்கு போஸ்டரை சிரஞ்சீவி வெளியிட்டார். ஹிந்தி போஸ்டரை சுனில் ஷெட்டி வெளியிட, மலையாள போஸ்டரை மோகன்லால் வெளியிட்டார்.

இந்த படத்திற்காக தன்னுடைய பெயரை கிச்சா சுதீபா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார் கிச்சா சுதீப். எதற்காக தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்பது பற்றி தகவல் இல்லை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தாத்தா - பாட்டிகளுடன் ஓபேபி படம் பார்க்கும் சமந்தாதாத்தா - பாட்டிகளுடன் ஓபேபி படம் ... சிம்பு நடிக்கும் மாநாடு பட அப்டேட்ஸ் சிம்பு நடிக்கும் மாநாடு பட அப்டேட்ஸ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Ms.K -  ( Posted via: Dinamalar Android App )
09 ஜூன், 2019 - 17:24 Report Abuse
Ms.K சைரா என்ற தெலுங்கு படத்தில் இவரின் போஸ்டர் வெளியான போதும் இதே கிச்சா சுதீபா தான் வந்தது !!!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in