Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாதுகாவலருக்கு சல்மான் பளார்...

06 ஜூன், 2019 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Salmankhan-slaps-his-secquirity

ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமேயில்லை. அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது அவருக்கு வழக்கம். கடந்த வாரம் கூட 'பாரத்' பட பிரமோஷன்களில் அந்தப் படத்தில் நடிக்க மறுத்து விலகிய பிரியங்கா சோப்ரா பற்றி கிண்டலாகப் பேசினார்.

'பாரத்' படத்தின் பிரிமியர் காட்சி மும்பையில் நடைபெற்ற போது சல்மான் காரில் ஏறுவதற்கு வசதியாக அவருடைய செக்யூரிட்டிகள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தினர். அப்போது சல்மான், திடீரென அவருடைய ஒரு செக்யூரிட்டியை அறைந்தார். அது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் ஒரு குழந்தையை பாதுகாப்பாக பிடிக்கத் தவறியதால்தான் அந்த செக்யூரிட்டியை சல்மான் கான் அடித்தார் என அவரது ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், பலர் சல்மான் அப்படி செக்யுரிட்டியை அடித்தது தவறு என்றும் தெரிவித்து வருகின்றனர்.

தன்னுடைய ரசிகர்களைப் பாதுகாப்பதில் எப்போதுமே கவனம் உள்ளவர் சல்மான் கான். அதிலும் ஒரு குழந்தை சல்மானைக் காண ஆவலுடன் ஓடி வரும் போது அந்தக் குழந்தையை பாதுகாப்பாக செக்யூரிட்டி பிடித்திருக்க வேண்டுமில்லையா. அதை அவர் செய்யவில்லை என்ற கோபத்தில்தான் சல்மான் அறைந்தார். இது குறித்து வேண்டுமென்றே சிலர் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார்கள் என சல்மான் ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதனிடையே, நேற்று வெளியான 'பாரத்' படம் நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்று வருகிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உயிரைத் திருப்பித் தந்த இறைவன்: சுஷ்மிதா உருக்கம்உயிரைத் திருப்பித் தந்த இறைவன்: ... பழம்பெரும் பாலிவுட் நடிகர் மரணம் பழம்பெரும் பாலிவுட் நடிகர் மரணம்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

veeramuthu - Chennai,இந்தியா
06 ஜூன், 2019 - 14:32 Report Abuse
veeramuthu இயலாட்ஹ்வர்கலை துன்புருத்தாத்ஹேர்கல். நீன்கலேல்லாம் எத்தனை கோடிக்கு அதிபதிகல். அளவுக்கு மெல பனம் வைத்திருப்பவனும் திருடனும். ஒன்றாகும். கோடி கோடியாப் பனம் வாய்த்திருப்பவன்கல் ஒன்னுசேர்ந்தால் இந்திய இந்திய நோயய் விரட்டி சேல்வம் கொழிக்கும் நாடாய் மாரி விடும். நல்லவன் போல் வேடம் போடாதீர்கழ்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in