Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்ப படங்கள் தராத குற்ற உணர்வில் தவிக்கிறேன் : எஸ்.ஜே.சூர்யா

21 மே, 2019 - 10:45 IST
எழுத்தின் அளவு:
SJ-Suriyas-feeling

இயக்குனர், நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்த மான்ஸ்டர் படம் சமீபத்தில் வெளிவந்தது. எலியுடன் அவர் நடித்திருக்கும் இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்டு எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது:

வாலியில் இயக்குநராக ஆரம்பித்த என் பயணம், மான்ஸ்டரோடு முற்றுப்பெறாமல் தொடரும். பாலைவனத்தில் ஒட்டக மனிதனாக நடந்து வந்த எனக்கு இந்த பயணம் சோலைவனமாக தெரிகிறது. ஒரு நடிகனாக வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணம் 25 ஆண்டுகள் தொடர் முயற்சிக்குப் பிறகு நிறைவேறியிருக்கிறது. இந்த புதுபயணம் தொடரும்.

இந்தப் படத்தை மக்கள் குடும்பத்தோடு வந்து பார்க்கும்போது இப்படி ஒரு வாய்ப்பை தவறவிட்டோமே என்று குற்ற உணர்வு வருகிறது. இத்தனை ஆண்டுகள் நான் ஏன் இதை செய்யவில்லை? என்று தவிக்கிறேன். இதேப்போல் அடுத்தடுத்து நல்ல படங்களில் நடிக்க ஏங்கி கொண்டிருக்கிறேன். நல்ல வாய்ப்பு என்னைத்தேடி வரும் என்றும் நம்புகிறேன்.

செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, மாயா படத்தின் இயக்குநரின் இரவா காலம் என இரண்டு படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. உயர்ந்த மனிதன் பல தடைகளைத் தாண்டி விரைவில் வெளியாகும். ஒரு தமிழ், ஹிந்தி, தெலுங்கு இந்த வரிசையில் நடிக்க விரும்புகிறேன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வெற்றியடைந்த பிறகே திருமணத்தைப் பற்றி யோசிப்பேன்.

இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா பேசினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தனுஷ் நடித்த ஆங்கில படம் தமிழில் வெளியாகிறதுதனுஷ் நடித்த ஆங்கில படம் தமிழில் ... சசிகுமாரின் ராஜவம்சம் : நிக்கி கல்ராணி ஹீரோயின் சசிகுமாரின் ராஜவம்சம் : நிக்கி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in