Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சதை திண்ணும் மனிதர்களால் சில்க் ஸ்மிதாவை இழந்தோம் : ஸ்ரீரெட்டி

04 மே, 2019 - 11:41 IST
எழுத்தின் அளவு:
We-lost-Silksmitha-says-Srireddy

ஆந்திர மற்றும் தமிழ் பட உலகில் இருக்கும் இயக்குநர்கள் பலரும், தனக்கு நடிப்பதற்கான வாய்ப்பைத் தருவதாகச் சொல்லி, தங்கள் பாலியல் இச்சையைத்தான் என்னிடம் தணித்துக் கொண்டனர்; ஆனால், எனக்கு கடைசி வரை வாய்ப்பே வழங்கவில்லை என, பச்சையாக படுக்கையறை சமாச்சாரங்களை பேசத் துவங்கினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

துவக்கத்தில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த பட உலகத்தினர், இவரது அதிரடிகள் ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ், சுந்தர் சி என பட்டியல் நீண்டு கொண்டே போனதும் அதிர்ச்சி அடைந்தனர். அதை நிறுத்த முயற்சிக்கும் போது, ஸ்ரீ ரெட்டி தன்னை நோக்கியும் சுட்டு விரல் நீட்டினால் என்ன செய்வது என புரியாமல் தடுமாறினர்.

ஒரு கட்டத்தில் தன் பிரச்னையை தானே தீர்த்துக் கொண்டு விடுவோம் என களம் இறங்கினார் ராகவா லாரன்ஸ். ஸ்ரீரெட்டிக்கு என்னுடைய அடுத்தப் படத்தில் வாய்ப்பளிக்கிறேன் என்று சொல்லி பரபரப்புக்கும்; அதிரடிக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து, சென்னை, வளசரவாக்கத்தில் வீடு எடுத்து தங்கியிருக்கும் ஸ்ரீ ரெட்டி, ராகவா லாரன்சின் பட அழைப்புக்காக காத்திருக்கிறார். அதிரடியாக பேசிய, சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஸ்ரீ ரெட்டியின் கை சும்மா இருக்குமா? எதையாவது அதிரடியாக பதிவிட்டு, அதிர்ச்சி கிளப்பிக் கொண்டேதான் இருக்கிறார்.

லேட்டஸ்ட்டாக, அவர் பதிவு: இங்கே, பெரிய நடிகர்களாக சொல்லப்படுகிறவர்களெல்லாம், தங்கள் பாலியல் இச்சைக்காக, நடிகை சில்க் ஸ்மிதாவை பயன்படுத்தியவர்கள்தான். அப்படிப்பட்ட சைக்கோக்களை ஒருநாளும் ஆளுமைகள் என ஏற்றுக் கொள்ள முடியாது. இப்படி சதை திண்ணும் மனிதர்களின் அரசியல் விளையாட்டுக்களுக்கு மத்தியில், சில்க் ஸ்மிதாவை நாம் இழந்து விட்டோம். அவர் ஒரு மாபெரும் நடிகை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஒரு பெண் விருப்பப்பட்டோ அல்லது வற்புறுத்தல் காரணமாகவோ, ஒரு ஆணுடன் படுக்கையை பகிந்தால், அந்தப் பெண்ணை சமூகம் தவறாகப் பேசுகிறது. ஆனால், அதே ஆண், அதே காரியத்தைச் செய்தால், அவனை ஒருவரும் கண்டுகொள்வதில்லை. இது தான் சமூகம். இதுதான் பார்வை. ஆக, சமூகத்தின் பார்வையில் தான் கோளாறு இருக்கிறது. இது மாற வேண்டும்.

இவ்வாறு அவர் மேலும் கூறியிருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜெயில் பற்றி உருகிய வசந்தபாலன்ஜெயில் பற்றி உருகிய வசந்தபாலன் கவர்ச்சியில் தாராளம் காட்டிய ரித்திகா கவர்ச்சியில் தாராளம் காட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
21 மே, 2019 - 19:14 Report Abuse
tamilvanan சில்க் இறந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமானது அவரது தாடி நண்பருடன் உண்டான பிரச்சினையே. அவரது அகால மரணத்துக்கு பிறகு அவரது தாடி நண்பர் எங்கு போனார் என்று தெரியவில்லை. மரணத்துக்கு பின் என்ன நடந்தது என்று யாரும் ஆராயவில்லை. அப்படி இருக்க, இவர் இப்படி கதை விடுகிறார். அப்படி ஸ் பிரசிங்க்கை இருந்தால், அவர் சினிமா உலகை விட்டு விலகி வாஸ்த்து இருக்கலாமே.
Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
05 மே, 2019 - 11:04 Report Abuse
Natarajan Ramanathan சினிமா வாய்ப்புக்காக எந்த நிலைக்கும் இறங்கும் இழி பிறவிகள்தான் இவர்கள்.
Rate this:
Ram Sekar - mumbai ,இந்தியா
04 மே, 2019 - 11:50 Report Abuse
Ram Sekar சில்க் ஸ்மிதா கூட ஒருவகையில் நல்ல நடிகை. குறைந்தபட்சம் மற்றவர்க்கு தீங்கு நினைக்காத பெண். ஆனால், நீ?? நீ எப்படி என்று இந்த உலகிற்கே தெரியும், சில்க் ஸ்மிதா பெயரை சொல்வதற்கு கூட உனக்கு அருகதை இல்லை நாயே, ஓடி போ.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in