Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜெயில் பற்றி உருகிய வசந்தபாலன்

04 மே, 2019 - 11:30 IST
எழுத்தின் அளவு:
Vasanthabalan-about-Jail-update

ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி கதாநாயகன், கதாநாயகியாக நடிக்க, வசந்தபாலன் இயக்கும் 'ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஜெயில் படம் குறித்த நிலவரத்தை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

''ஜெயில் திரைப்படத்தின் கடைசி ரீலுக்கான பின்னணி இசை எழுதும் வேலை முடிந்தது. ஜீவியின் விரல்களில் வழிந்த இசை என் ஆழ்மன உணர்ச்சியை ஆழம் பார்த்தது. ரசிகனையும் விடாது. தவிர்க்கமுடியாத விசையொன்றால் ஈர்க்கப்படுபவனைப்போல் இசையின் சுழற்சியில் மனம் முன்னும் பின்னும் பம்பரமாய் சுழன்றாடியது. காட்சியும் இசையும் ஒன்றையொன்று புதுமணதம்பதி போல கைகோர்த்துக்கொண்டு என் முன் உலாவர என்னையறியாமல் கண்ணீர் விழியில் வழிந்தது. மிக அழுத்தமாக காட்சி பிம்பம் அந்த பிம்பத்தின் உணர்ச்சி இருமடங்காக ஆக்கும் இசை.

என் இசையின் மொழி ஜீவிக்கு எளியதாக புரியும். இப்போது கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கையில் மிக உயர்ந்த இடத்தில் இருந்தது. பின்னணி இசை கோர்ப்பு வேலைகள் பம்பாயில் முடிவுற்று முழுப்படத்தை பார்க்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன். மனதால் ஜீவியை இறுக அணைத்து கொண்டேன். இந்த முறை அர்ச்சுனா உன் இலக்கு தப்பாது என்று மனம் சொன்னது. காலதேவன் துணையிருக்கட்டும். இசை இருபுறங்களிலுமாக மாறி மாறி ஒலித்து உளமயக்கை உருவாக்கியது. மனம் கொந்தளிப்பு அடங்கியது. ஜெயில் தன்னுடலையே சிறகாக்கிக் கொண்டு பறக்கும் நாளுக்காய் காத்திருக்கிறது. ஜெயில் தன் விடுதலையை தானே தேடிக்கொள்ளும்'' என பதிவிட்டுள்ளார்.

வசந்தபாலனின் பதிவு ஜெயில் படத்தின் மீதான நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பல மடங்காக்கிவிட்டது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஆபாச பார்முலாவிலிருந்து விலகிய இயக்குநர்ஆபாச பார்முலாவிலிருந்து விலகிய ... சதை திண்ணும் மனிதர்களால் சில்க் ஸ்மிதாவை இழந்தோம் : ஸ்ரீரெட்டி சதை திண்ணும் மனிதர்களால் சில்க் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in