Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படப்பிடிப்பு தளத்தில் ராஷ்மிகாவை அழவைத்த இயக்குனர்

23 ஏப், 2019 - 12:25 IST
எழுத்தின் அளவு:
Raashmika-tears-during-shooting

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்கிற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ராஷ்மிகா. தற்போது பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வரும் இவர், தமிழில் கார்த்தி ஜோடியாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கீதா கோவிந்தம் படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவையான நிகழ்வு பற்றி சமீபத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் ராஷ்மிகா.

ஒருநாள் சற்று தாமதமாக படப்பிடிப்பு தளத்திற்கு சென்றாராம் ராஷ்மிகா. படப்பிடிப்பு தளத்தில் இருந்த யாரும் அவருடன் சரியாக முகம் கொடுத்து பேசவில்லையாம். அதற்கான காரணம் தெரியாமல் குழம்பிய ராஷ்மிகா, இந்த நிலை தொடரவே அப்செட் ஆகி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிட்டாராம்.

அதன் பிறகுதான் படத்தின் இயக்குனர் ராஷ்மிகாவிடம் சென்று, படப்பிடிப்பு குழுவினர் செய்த குறும்புத்தனமான விளையாட்டு என்று கூறினாராம்.. அதுவும் எதற்காக என்றால் அன்றைய தினம் படப்பிடிப்பில் ராஷ்மிகாவின் முகம் சோகமாக இருக்கும்படியான காட்சிகளை படமாக்க வேண்டி இருந்ததால் அந்த காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக படக்குழுவினர் அனைவரும் திட்டமிட்டு இதை செய்தோம் என்று இயக்குனர் விளக்கிய பின்னர் தான் நிம்மதியானாராம் ராஷ்மிகா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வில்லன் ஆனார் வெங்கட்பிரபுவில்லன் ஆனார் வெங்கட்பிரபு சோஷியல் மீடியா ஸ்டார் விஜய் தேவரகொண்டா சோஷியல் மீடியா ஸ்டார் விஜய் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in