Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

100வது நாளில் 'விஸ்வாசம்'

20 ஏப், 2019 - 10:19 IST
எழுத்தின் அளவு:
Viswasam-at-100th-day

சிவா இயக்கத்தில், இமான் இசையமைப்பில், அஜித், நயன்தாரா மற்றும் பலர் நடிக்க ஜனவரி 10ம் தேதி வெளிவந்த படம் 'விஸ்வாசம்'. ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும் அதே தினத்தில் வெளிவந்ததால் இரண்டு படங்களுக்கும் இடையே வசூலில் கடும் போட்டி நிலவியது. இரு தரப்பிலும் மாறி மாறி யார் படம் வசூலில் முதலிடம் என அஜித் ரசிகர்களும், ரஜினி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் சண்டையிட்டுக் கொண்டார்கள்.

'பேட்ட' படத்தை விடவும் 'விஸ்வாசம்' படம்தான் அதிக வசூல் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவித்தன. நேற்று 'விஸ்வாசம்' படத்தின் 100வது நாளை சமூக வலைத்தளங்களில் தயாரிப்பு நிறுவனம், வினியோகித்த நிறுவனம், அஜித் ரசிகர்கள் கொண்டாடினர். அஜித் நடித்த படங்களிலேயே அதிகமான வசூல் பெற்ற படம் 'விஸ்வாசம்'. அதற்கு முன் 'வேதாளம்' படம்தான் அந்த சாதனையை வைத்திருந்தது.

100வது நாளான நேற்று எந்தத் தியேட்டரில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது எனத் தெரியவில்லை. ஏதோ ஒரு ஊரில் இப்படம் ஓடிக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது. 'விஸ்வாசம்' படத்திற்குப் போட்டியாக வெளிவந்த 'பேட்ட' படத்தை சில நாட்களுக்கு முன்பு டிவியில் ஒளிபரப்பு செய்துவிட்டார்கள். மே 1 அஜித் பிறந்த நாளன்று 'விஸ்வாசம்' படத்தை டிவியில் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
தான் நடித்த படத்தையே கிண்டல் செய்த பார்த்திபன்தான் நடித்த படத்தையே கிண்டல் செய்த ... விஜய் 63 படத்திற்கு தடைகோரி வழக்கு விஜய் 63 படத்திற்கு தடைகோரி வழக்கு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

dharmadurai - Boston,யூ.எஸ்.ஏ
20 ஏப், 2019 - 12:25 Report Abuse
dharmadurai Petta screened many theaters even in its 100th Day. Viswassam performed better than Petta in C centers of Tamilnadu only. Petta earned almost 50% more than Viswasam including overseas.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in