Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி - கே.எஸ்.ரவிக்குமார் திடீர் சந்திப்பு

10 ஏப், 2019 - 17:03 IST
எழுத்தின் அளவு:
Rajini---KS-Ravikumar-met-yesterday

தனது 167 படமான தர்பார் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளார் ரஜினிகாந்த். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் இன்று(ஏப்.10) துவங்கியது.

முன்னதாக மும்பை செல்வதற்கு முன்பு நேற்று ரஜினியை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சந்தித்து பேசியிருக்கிறார். கேஎஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த சந்திப்பு அநேகமாக இருவரின் படம் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையே சென்னையில் நடைபெற்ற மாளிகை படத்தின் டிரைலர் விழாவில் கலந்து கொண்ட கே.எஸ்.ரவிக்குமார், இப்போது 7 படங்களில் பிசியாக நடித்து வருகிறேன் என்றார். படம் இயக்குவது சம்பந்தமாக எந்த தகவலையும் அவர் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஷாரூக்கானை சந்தித்த அட்லீஷாரூக்கானை சந்தித்த அட்லீ தமிழில் பேசி அசத்திய தெலுங்கு நடிகர் ஆலி தமிழில் பேசி அசத்திய தெலுங்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
10 ஏப், 2019 - 18:52 Report Abuse
Vasudevan Srinivasan சும்மா எதையாவது சொல்லவேண்டும் என்று சொல்லாதீர்கள்.. ஏதாவது சொந்த விஷயமாக சந்தித்திருக்கலாம்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in